.

Pages

Sunday, January 28, 2018

அமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: ஜன.28
அமீரகத்தின் மேற்குப் பிராந்திய கடலில் வேகமாக பரவி வரும் சிவப்பு அலைகள் எனும் ஒரு வகை பாசி குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை

அமீரகத்தின் மேற்குப் பிராந்திய கடற்பகுதிகளில் (Coastal areas of western UAE) ஒருவகை நுண்ணிய கடல் தாவரங்களான (As certain types of phytoplankton can make marine organisms poisonous), சிவப்பு அலைகள் என வர்ணிக்கப்படும் ஒரு வகை பாசி (A red tide algal bloom) பரவி வருவதை அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் உறுதி செய்துள்ளதுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதிகளில் மீன் பிடிக்கவும், கடற்கரைகளுக்கு செல்வோர் இப்பகுதிகளில் நீந்தவோ, மீன்கள், சிப்பிகள் மற்றும் மட்டிகளை சேகரிக்கவோ, உணவாக உட்கொள்ளவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ராஸ் அல் கைமாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் ஆணையம் மேற்கொண்ட கடல் ஆய்வுகளின் மூலம் ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலத்தின் மேற்குப்புற கடல் முதல் ஓமன் வளைகுடா வரை இப்பாசிகள் படர்ந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது (in the areas alongside the economic zone overlooking the west coast of the Arabian Gulf and the eastern coast of the Gulf of Oman). சேட்டிலைட் வழியாக எடுக்கப்பட்ட படங்களும் பாசிகள் படர்ந்து வருவதை உறுதி செய்துள்ளது.

இப்பாசிகள் வெளியிடும் விஷத்தினால் கடல் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் என்பதாலேயே இதற்கு சிவப்பு அலைகளின் மலர்ச்சி (As the name suggests, the bloom of algae often turns the water red) எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த பாசி விரைவில் இந்தியப் பெருங்கடலில் அமீரகத்திற்கு அடுத்து அமைந்துள்ள பக்கத்து நாடுகளுக்கும் பரவும் என்றும், இந்தப் பாசிகள் வெளியிடும் விஷம் மனிதர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டலம் நிர்வாகம் (United States based National Oceanic and Atmospheric Administration (Noaa) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக விளங்கும் இப்பாசிகள் பொதுவாக கேடுகள் ஏற்பாடுத்தாது என்றாலும் அவை அளவுக்கு மீறி விளையும் போது மட்டுமே அதன் விஷத்தன்மைகளை வெளியிடும் அதனால் மனிதர்கள், மட்டி (கிளிஞ்சல்கள்), கடல்வாழ் பாலூட்டிகள், பறவைகள் போன்ற உயிர்களுக்கு காய்ச்சல், உடல் நலிவு, சில வேளை அரிதான மரணம் போன்ற துன்பங்களை சந்திக்க நேரிடும்.“harmful algal blooms, HABs, occur when colonies of algae—simple plants that live in the sea and freshwater—grow out of control while producing toxic or harmful effects on people, fish, shellfish, marine mammals, and birds. The human illnesses caused by HABs, though rare, can be debilitating or even fatal.”

மூச்சுத்திணறலை ஏற்படுத்தவும் வல்லவை இந்த பாசிகள் என்றாலும் கடலில் உள்ள எல்லா பாசிகளும் ஆபத்தானவை அல்ல. பல வகையான பாசிகள் நன்மை தரக்கூடியவை. மேலும் கடலின் உணவு சழற்சியில் முக்கிய காரணியாகவும் இந்த பாசிகள் விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.