.

Pages

Wednesday, January 24, 2018

சீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜன.24
தென் சீனாவின் புஜியான் மாகாணத்தில் அமைந்துள்ள லோங்யான் நகரில் 'நான்லோங் ரயில்வே ஸ்டேஷனை' மிக கவனமான முன்னேற்பாடுகளுடன் சுமார் 1,500 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 7 குழுக்களாக பிரிந்து வேலைகளை 7 பிரிவாக பிரித்துக் கொண்டு ராணுவம் போன்று திட்டமிட்டு இயங்கி கனக்கச்சிதமாக 9 மணிநேரத்தில் ஒரு ஸடேஷனையே முழுமையாக கட்டி முடித்து சாதனை செய்துள்ளனர். இப்பணிக்கு துணையாக 7 ரயில்களும் 23 மண் தோண்டும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

சீன நாட்டின் தென் கிழக்கு பகுதியையும் மத்திய பகுதியை இணைக்கும் நோக்குடன் 152 மைல் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த அதிவேக ரயில்வே லைனில் மணிக்கு 124 கி.மீ வேகத்தில் ரயில்கள் 2018 வருட இறுதிக்குள் இயக்கப்படவுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் சீனா நிகழ்த்தியுள்ள பிற சாதனைகள்:
1. குயுசோ மாகாணத்தில் நட்சத்திரங்கள், கிரகங்களில் எழுப்பும் ஒலி மற்றும் வேற்று கிரகவாசி பற்றி ஆராய 500 மீட்டர் குறுக்களவு (Diameter) கொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை 129 மில்லியன் டாலர் செலவில் நிறுவியுள்ளது. இதற்கு முன் போர்ட்டோ ரிகோ நாட்டில் 300 மீட்டர் குறுக்களவிற்கு அமைக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற ரேடியோ டெலஸ்கோப்பின் சாதனையை முறியடித்தது.

2. கிழக்கு சீனா பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான 'தியான்ஹூவாங்பிங்' நீர் மின்சாரத் திட்டத்தை (Tianhuangping hydroelectric project) நிறுவியது.

3. 2009 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய தியேட்டர்களின் ஒன்றான குவாங்சோ ஒபேரா ஹவுஸ் எனும் தியேட்டரை திறந்துள்ளது.

சாதனை எல்லாம் சரிதான் என்ற வாசகம் தான் அடிவயிற்றை கலக்குது!

வீடியோ பார்க்க: 
http://www.independent.co.uk/news/world/asia/chinese-workers-productivity-build-nanlong-railway-station-nine-hours-longyan-a8173881.html

Source: The Independent / Msn 
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.