.

Pages

Wednesday, January 24, 2018

அமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட்டும் ஆப் வெளியீடு!

அதிரை நியூஸ்: ஜன.24
அமீரகத்தில் வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட்டும் புதிய, எளிமையான ஆப் (App) ஒன்றை இந்தியாவுக்கான அமீரகத் தூதர் டாக்டர். அஹ்மது அப்துல் ரஹ்மான் அல் பன்னா அவர்கள் புது டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

@UAEembassyIndiahttps://play.google.com/store/apps/details?id=com.uaeembassynewdelhi 
…@MOFAUAE @Forsan_UAE

இந்த ஆப்பை பயன்படுத்தி அமீரக வேலைவாய்ப்பு விசா தொடர்பான பெரும்பாலான வேலைகளை சுயமாகவே விண்ணப்பதாரரால் முடித்துக் கொள்ள இயலும். ஆரம்பமாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆப் விரைவில் மலையாளத்திலும் வெளியிடப்படும் எனவும் அமீரக தூதர் தெரிவித்தார்.

இந்த ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தொழிற்நுட்ப மொபைல்களில் (The app is available for both Android and iOS devices) செயல்படும். கடந்த வருடம் சுமார் 1.6 மில்லியன் இந்தியர்கள் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் சுமார் 1 மில்லியன் பேர் பிற எமிரேட்டுக்களை காட்டிலும் துபை வழியாகவே வந்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.