.

Pages

Monday, January 22, 2018

அமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் தீ விபத்தில் மரணம்!

அதிரை நியூஸ்: ஜன. 22
அமீரகம், புஜைராவில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் தீயால் மரணம்

இன்று அதிகாலை பஜர் நேரத்தில் புஜைராவின் 'ரோல் தாத்னா' (Rol Dhadna) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிடித்த தீயினால் சூழ்ந்த புகையில் சிக்கியதால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் மரணமடைந்தனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்று அதிகாலை அக்குழந்தைகளின் தாய் சுமார் 5.40 மணியளவில் புஜைரா தீயணைப்புத் துறைக்கு போன் செய்து உதவி கோரினார். தீயணைப்புத் துறை வந்த போது வீட்டின் ஒரு பகுதி எரிந்திருந்தது, அதனுள் சிக்கியிருந்த 5 வயது முதல் 15 வயது வரையுள்ள 4 பெண் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் புகையால் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.

இறந்த குழந்தைகளுடைய ஜனாஸா தொழுகை இன்று லுஹர் தொழுகையை தொடர்ந்து ரோல் தாத்னா பள்ளிவாசலில் Rol Dhadna mosque) நடத்தப்பெற்று ரோல் தாத்னா மையவாடியில் (Rol Dhadna cemetery) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் அக்குழந்தைகளின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யவும். தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. குழந்தைகளின் ஜனாஸாக்கள் திப்பா புஜைரா மருத்துவமனையில் (Dibba Fujairah hospital) வைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.