.

Pages

Thursday, January 25, 2018

சீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன. 25
1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ஸ்காட்லாந்திலுள்ள எடின்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் முதன்முதலாக உயிரணுக்கள் இன்றி, ஆண் பெண் உறவின்றி, ஒரு ஆட்டின் பால் சுரப்பி ஒன்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு செல்லை சோதனைக்கூடத்தில் வளர்த்து இன்னொரு ஆட்டின் வயிற்றில் வைத்து வளர்க்கப்பட்டு 'டோலி' (Dolly) என்ற பெயரிடப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிரசவிக்கப்பட்டது.

நாம் ஒரு பேப்பரை போட்டோகாப்பியர் (ஜெராக்ஸ்) மெஷினில் வைத்து இன்னொரு பிரதி எடுப்பதற்கு ஒப்பானது குளோனிங் என்பது. குளோனிங் மூலம் பிறந்த இந்த டோலி ஆடு சுமார் 6 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி நுரையீரல் மற்றும் வாத நோயால் 6 ஆண்டுகளிலேயே இறந்தது. இடையில் இயற்கையான கருத்தரிப்பு வழியாக முதல் பிரசவத்தில் 1, இரண்டாவது பிரசவத்தில் 2, மூன்றாவது பிரசவத்தில் 3 என மொத்தம் 6 குட்டிகளையும் ஈன்றது.

டோலி குளொனிங் மூலம் பிரசவிக்கப்பட்ட நிகழ்வு அறிவியல் உலகிலும், ஆன்மீக உலகிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆதரவும் எதிர்ப்பும் கலந்து எழும்பின. இதே அடிப்படையில் மனிதர்களையும் பரதி எடுக்க முடியும் என்று கூறப்பட்டதை அடுத்து ஆன்மீக உலகம் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்ததை அடுத்து மனிதனை குளோனிங் செய்ய உலகின் பெரும்பான்மையான நாடுகளில் மனிதக் குளோனிங் தடை செய்யப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளும் மனிதக் குளொனிங்கை கைவிட்டனர் என்றாலும் சுமார் 12 க்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் பல வகையான மிருகங்கள் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டன.

இந்நிலையில், டோலி 21 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக 2 குரங்கு குட்டிகளை குளொனிங் மூலம் பிரசவிக்கச் செய்துள்ளனர் சீனாவின் சயின்ஸ் அகாடமி விஞ்ஞானிகள். இந்த 2 குட்டிகளுக்கும் 'ஜோங் ஜோங்' 'ஹூவா ஹூவா' என்று பெயரிட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.