அதிராம்பட்டினம், ஜன.24
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கினைந்த தஞ்சை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த சேதுபாவாசத்திரம், புதுத்தெரு இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான மையவாடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் துரிதப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அஹமது ஹாஜா, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜகதாப்பட்டினம் செய்யது, நாகை மாவட்ட செயலாளர் ஜபருல்லா, திருவாரூர் மாவட்ட மமக செயலாளர் குத்தூப், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கறம்பக்குடி சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் தொண்டி சாதிக் அலி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில், சேதுபாவாசத்திரம், புதுத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்டு, கடந்த 25 நாட்களாக கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், தாங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகுவதாக சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, கடலில் மீன்பிடிப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையில் புகார் மனு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சேக் முகைதீன் நன்றி கூறினார்.
இதன் பின்னர், சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.