.

Pages

Friday, January 26, 2018

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 69 வது குடியரசு தின விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இணைந்து குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

குடியரசு தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றோருக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

விழா முடிவில் பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர். விழாவில் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி, அப்துல் ஜலீல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.