.

Pages

Tuesday, January 23, 2018

இஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்!

அதிரை நியூஸ்: ஜன.23
பாலஸ்தீன் மண்ணை பலவந்தமாக ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் எனும் நாட்டை முக்கியமான இஸ்லாமிய நாடுகளும், வட கொரிய போன்ற உலக நாடுகளும் ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. இந்த பாலஸ்தீனம் எனும் திறந்தவெளிச் சிறையில் அடைபட்டுள்ள பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் படும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் குழந்தை கடத்தலிலும் அவர்களை கொன்று அவர்களது உடல் உறுப்புக்களை திருடுவதிலும் முன்னனியில் உள்ளவர்கள் அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இஸ்ரேலிய ராணுவத்தினர்.

கடந்த வாரம் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தனது மனைவியுடன் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்தார். உலகெங்கும் பரவியுள்ள இஸ்ரேலின் கோர முகத்தை மறைத்திட பல்வேறு தகிடுதத்த திட்டங்களை நடத்தி வரும் நாடகங்களில் ஒன்றாக ;பாலிவுட்' எனப்படும் ஹிந்தி திரைப்பட நடிகர், நடிகைகளை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

'ஷலோம் பாலிவுட்' என்ற பெயரில் நடத்தப்பட்ட திரைப்பட சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான ஹிந்தி நடிகர்கள் கலந்து கொண்டு பெருமையுடன் செல்ஃபி  புகைப்படங்களை எடுத்து வெளியிட்டனர். ஆனால், ஹிந்தி திரைப்படங்களின் உச்ச நட்சத்திரங்களாக அறியப்படும் ஆமிர் கான், சல்மான் கான், ஷாருக் கான் ஆகிய 3 கான் நடிகர் முற்றிலும் புறக்கணித்து தாங்கள் கொண்டுள்ள பெயருக்கு முதன்முதலாக உண்மையுடன் நடந்து கொண்டது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 3 கான் நடிகர்களையும் எனப்படும் புறக்கணி, திரும்பப்பெறு, தடை செய் (Boycott, Divestment, Sanctions (BDS) movement) ஆகியவற்றிற்கான இயக்கத்தின் தெற்காசியப் பிரிவுத் தலைவர் அபூர்வா கவுதம் நெதன்யாகுவை புறக்கணித்ததை பாராட்டி வரவேற்றுள்ளார். நெதன்யாகுவின் இந்திய பயணத்தின் முதல் நாள் கொல்கத்தாவில் பிரம்மாண்ட மக்கள் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.