அதிரை நியூஸ்: ஜன. 21
இந்திய அரசு சமீபத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள கரும் நீல நிற பாஸ்போர்டிற்கு பதிலாக ஆரஞ்சு (காவி) நிற பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும், பாஸ்போர்ட்டில் முக்கிய தகவல்களை கொண்டுள்ள கடைசி பக்கம் முழுமையாக நீக்கப்படும் என்றும் அறிவித்தது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆரஞ்சு பாஸ்போர்ட் பெற்றவர்கள் வேலைவாய்ப்பிற்காக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 18 வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடியகல்வுத் துறையிடம் ஒவ்வொரு முறையும் தடையில்லாச் சான்று பெற (ECNR Clearance) வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த புதிய பாஸ்போர்ட் கொள்கை பெயரளவில் கூட பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் கொண்டு வரப்பட்டுள்ளது சட்டம் எண் 14 படி தவறு என்பதால் இந்தியர்கள் மத்தியில் மத்திய அரசுக்கு ரகசியத் திட்டங்கள் ஏதுமிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்களுக்கு எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை என அமீரகத்திற்கான இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமீரகத்தில் செயல்படும் இந்தியர்களின் சமூக ஆர்வ அமைப்புக்கள் பல கட்ட சட்டரீதியான தீவிர எதிர்ப்புக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளன. இந்த போராட்டங்களை 'பிரவாஸி பந்து வெல்பேர் டிரஸ்ட் (Pravasi Bandhu Welafare Trust)' 'இன்காஸ் யுஏஈ (Incas UAE)' மற்றும் 'இன்டியன் அசோசியேசன் ஷார்ஜா (Indian Association Sharjah - IAS)' ஆகியவை முன்னெடுத்துள்ளதுடன் அமீரகத்தில் செயல்படும் இன்னும் பல இந்திய அமைப்புக்களையும் 10 நாட்களுக்குள் கூட்டி போராட்டங்களை இணைந்து தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.
இதனடிப்படையில் மத்திய அரசின் புதிய பாஸ்பேர்ட் கொள்கையை வாபஸ் வாங்கக் கோரி பிரதமர், ஜனாதிபதி, வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய கட்சிகளின் தலைவர்களான அமீத் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் பெரும் எண்ணிக்கையில் மனுக்கள் (Mass Petition) அனுப்பும் போராட்டமும் இந்தியா முழுவதுமுள்ள 26 உயர்நீதி மன்றங்களிலும் வழக்குத் தொடரும் போராட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முறையிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.