தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், டிப்ளமோ/ஐடிஐ டெக்னிசியன்கள் மற்றும் லேபர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.
தற்போது, ஓமன் நாட்டிலுள்ள முன்னணி பவுண்டரி ஆலைக்கு, ஐடிஐ, 10th / 12th தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் 22 முதல் 27 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர் இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மிகைநேரப் பணி ஊதியத்துடன் (Overtime) சேர்த்து மொத்த மாத ஊதியமாக ரூ. 24,740/- மற்றும் ஊதிய உயர்வு, இலவச உணவு, இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, விமான டிக்கெட் ஆகியவை வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், டிரான்ஸ்பர் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வெள்ளை நிறப் பிண்ணனியுடன்கூடிய ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.1.2018 அல்லது 28.1.2018 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் முதனிலைத் தேர்விற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, www.omcmanpower.com என்ற
வலைதளத்திலும், 044-22505886 / 22502267 / 22500417 / 8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.