.

Pages

Tuesday, January 23, 2018

அபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000 திர்ஹம் அபராதம்!

அதிரை நியூஸ்: ஜன.23
அமீரகம், அபுதாபி நெடுஞ்சாலை ஓரங்களில் தொழுதால் 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு தொழுவதால் பிற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு தொழுவோர் மீது தலா 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி போலீஸ் எச்சரித்துள்ளது.

தொழ விரும்புபவர்கள் மற்றும் ஓய்வறைகளை (Toilets) பயன்படுத்த விரும்புவோர் அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் லேபர் கேம்ப் போன்ற பகுதிகளுக்கு சென்றே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் துபை ஷார்ஜா இடையேயான சாலையில் இதுபோல் தொழுது கொண்டிருந்தவர்களின் மீது கட்டுப்பாடற்று வந்த வாகனம் ஒன்று மோதியதால் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். அது குறித்த அதிரை நியூஸ் வெளியிட்ட செய்தியை வாசிக்க,

துபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி !

தொழுகைக்காக மட்டுமல்ல வேறு எந்தக் காரியங்களுக்காகவும் சாலை ஓரங்களில், அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனத்தை நிறுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இன்டெர் செக்சன்கள் அல்லது வளைவுகளில் நிறுத்தியால் 500, நடந்து செல்வோருக்கு இடையூராக நிறுத்தினால் 400 மற்றும் சாலையில் திடீரென பழுதாகும் வாகனங்கள் குறித்து பிற ஓட்டுனர்களை எச்சரிக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்தாவிட்டால் 500 திர்ஹங்கள் என அபராதங்கள் விதிக்கப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.