.

Pages

Wednesday, January 24, 2018

ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்கான் தேர்வு !

பட்டுக்கோட்டை, ஜன.24
ஜமாஅத்துல் உலமா சபை தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்கான் தேர்வு செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியபள்ளிவாசலில் கடந்த 36 ஆண்டுகளாக தலைமை இமாமாக இருந்து வருபவர் மவ்லவி எஸ்.அய்யூப்கான் (வயது 54). 

இந்நிலையில், ஜமாஅத்துல் உலமா சபை மாநில துணைத் தலைவர் மவ்லவி. பி.எம் ஜியாவுத்தீன் அகமது பாகவி தலைமையில், அய்யம்பேட்டை அஞ்சுமன் மஹாலில் கடந்த (ஜன.20) சனிக்கிழமை நடந்த, 2018-2020 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தேர்தலில், மவ்லவி எஸ்.அய்யூப்கான் தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், மாவட்டச் செயலாளராக ஆவணியாபுரம் மாஹதுல் ஹைராத் அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி. ஏ.ஜபருல்லாஹ் ஃபாஜில் மன்பஈ, மாவட்டப் பொருளாளராக தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி எம்.ஹாஜா முகைதீன் மிஸ்பாஹி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.