.

Pages

Wednesday, January 24, 2018

9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் வடிவமைத்த விஞ்ஞானிகள்!

அதிரை நியூஸ்: ஜன.24
9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த கிரேக்க இளம்பெண்ணை மீண்டும் வடிவமைத்த விஞ்ஞானிகள்.

கிரீஸ் நாட்டின் தெஸ்ஸாலி பிரதேசத்தில் உள்ள தியோபெட்ரா எனப்படும் ஒரு குகையில் (Theopetra Cave, in the Thessaly region) சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒரு பெண்ணின் சிதிலங்களை கண்டெடுத்து ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலீஸ் அருங்காட்சியகத்தில் (Dawn is on display at the Acropolis Museum in Athens) வைத்துள்ளனர். இவளுக்கு 'விடியல்' (Dawn) என பொருள்படும் கிரேக்கப் பெயரான 'அவ்கி' (Avgi) என பெயர் சூட்டினர்.

இந்தப் பெண்ணின் உடற் சிதிலங்களுக்கு டெர்ரகோட்டா அச்சு முறைப்படி சிலிக்கான்களை கொண்டு அவளுடைய பழைய முகத்தை மீண்டும் கட்டமைத்தார். இந்தப் பெண் இறக்கும் போது சுமார் 15 முதல் 18 வயதுடைய இளம்பெண்ணாக இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (The orthodontics professor Manolis Papagrikorakis, who created a silicone reconstruction of her face from a terracotta mould of her head)

கிரேக்க நாட்டு கலாச்சார அமைச்சக அறிக்கையின் படி, இந்த குகையில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளன. கற்காலத்திற்கு பின் அதாவது The Palaeolithic, Mesolithic and Neolithic periods என்ற 3 யுகங்களில் வாழ்ந்த மனிதர்களின் அடையாளங்களும் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்களும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளது. இந்தப் பெண் வாழ்ந்தது மனிதர்கள் நாகரீக வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த ஆரம்பக் காலகட்டம் என்பதால் இந்த இளம்பெண்ணுக்கு விடியல் என பெயர் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன விஞ்ஞானத்தின் உதவி கொண்டு மீண்டும் முகம் போர்த்தியவர் பேராசிரியர் மனோலிஸ் பாப்பகிரிகொரக்கிஸ் (Professor Manolis Papagrikorakis) என்பவராவர். இந்த முக அச்சு, அச்சு அசலாக இருக்க வாய்ப்பில்லாவிட்டாலும் பெருமளவு ஒத்திருக்கும் என நம்பலாம்.

Source: Rueters / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.