.

Pages

Sunday, January 28, 2018

அமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ-சர்ட் விளம்பரம்!

அதிரை நியூஸ்: ஜன. 28
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்தவர் 60 வயது ராபர்ட் லெய்போவிட்ஜ், 12 வயது முதலே கிட்னி தொந்தரவு உள்ளவர். கடந்த 10 ஆண்டுகளாக கிட்னி மேலும் பழுதடைய துவங்கியதை அடுத்து கடந்த 4 வருடங்களாக கிட்னி கொடையாளியை எதிர்பார்த்து பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் டிஸ்னி வேல்டுக்குச் செல்லும் போது தனது டீ-சர்ட் பின்புறம் தனக்கு 'ஓ' பாஸிடிவ் இரத்த வகையைச் சேர்ந்தவரிடமிருந்து கிட்னி தானம் வேண்டுமென்றும் தனது தொடர்பு எண்ணை பதிந்தும் வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலர் ஈமெயில், மொபைல், டிவிட்டர், வாட்ஸப் என தொடர்பு கொள்ளத் துவங்கினர். இதையெல்லாம் ஆரம்பத்தில் விளையாடுகிறார்ளோ என ஒதுக்கிய லெய்போவிட்ஜ் உண்மை என உணர்ந்தபோது மனிதாபிமானம் வாழ்வதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

இறுதியாக, ரிட்சி சல்லி என்ற 39 வயதுடைய முன்பின் அறிமுகமில்லாத இன்டியானாவைச் சேர்ந்த நபர் தொலைபேசி வழியாக அழைத்து தான் கிட்னி தானம் தருவதாக சொன்னதை தொடர்ந்து இருவருக்கும் நியூ யார்க்கில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு இருவருடைய பொருத்தங்களும் பக்காவாக பொருந்தியதை தொடர்ந்து வெற்றிகரமாக ஆபரேசன் செய்து முடிக்கப்பட்டது.

எனது கிட்னி தானத்தின் மூலம் ஒரு தந்தை தன்னுடைய குழந்தைகளுடன் மேலும் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்வார் என்பதாலேயே தந்தேன் என சிம்பிளாக கூறினார் ரிட்சி சல்லி. ஒரு சின்ன டீ-சர்ட் விளம்பரம் சாத்தியமாக்கிய மனிதாபிமானம்!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.