.

Pages

Sunday, January 28, 2018

துபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் - புதிய ஆய்வு தகவல்!

அதிரை நியூஸ்: ஜன.28
துபை ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் - புதிய ஆய்வு தகவல்.

துபையும் ஷார்ஜாவும் சுற்றியுள்ள இத்திஹாத் ரோடு, டமாஸ்கஸ் சாலை, பெய்ரூட் சாலை, முஹமது பின் ஜாயித் ரோடு, எமிரேட்ஸ் ரோடு ஆகிய 5 முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் மூலம் இருபுறமும் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.

மேற்காணும் 5 நெடுஞ்சாலைகள் வழியாக இருபுறமும் மணிக்கு சராசரியாக 33,200 வாகனங்கள் வரை செல்லலாம் ஆனால் பரபரப்பான நேரங்களில் சுமார் 40,000 முதல் 52,000 வாகனங்கள் வரை செல்வதால் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் ஒவ்வொரு வாகனமும் சராசரியாக 2.40 மணிநேரங்கள் சாலைகளில் காத்திருக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

இந்தத் தாமதம் மற்றும் எரிபொருள் இழப்புக்களை பொருளாதார ரீதியாக கணக்கிட்டால் ஆண்டொன்றுக்கு சுமார் 4.3 பில்லியன் திர்ஹம் இழப்பாகின்றன. இந்த இழப்புத் தொகையை பயன்படுத்தி ஆண்டுக்கு சுமார் 12 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ லைன்களையே புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டு செல்லலாம்.

சுமார் 3 பில்லியன் செலவில் துபையின் அல் கியாதா மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து ஷார்ஜாவின் சிட்டி சென்டர் வரை சுமார் 7.5 கி.மீ தூரத்திற்கு (இடையில் வேறு மெட்ரோ நிலையங்களை அமைக்காமாலேயே) நேரடியாக மெட்ரோ ரயிலை இயக்கினால் மணிக்கு இருபுறமும் சுமார் 22,000 பயணிகள் பயணம் செய்வர், இதன் மூலம் தற்போதைய போக்குவரத்தின் நெரிசலில் 3ல் 1 பங்கை குறைத்துவிட முடியும்.

மேலும் நெரிசலுக்கு காரணமான சுமார் 52,000 வாகனங்களிலிருந்து சுமார் 16,000 வாகன ஓட்டிகள் மெட்ரோவுக்கு மாறுவர் என இரு எமிரேட்டுகளின் போக்குவரத்து துறையின் ஒத்துழைப்புடன் ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று அறிக்கையளித்துள்ளது. இது இரு எமிரேட்டுகளின் போக்குவரத்தை குறைக்கும் நிரந்தரத் தீர்வல்ல என்றும், இந்த அறிக்கையை அமீரகத்தின் மத்திய அமைச்சரவை (Federal Government) பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வேறு மாற்றுவழிகளையும் முயற்சிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு சில வருடங்களுக்கு முன், துபை ஷார்ஜாவை புதிய தரை வழிச்சாலைகள் மூலம் இணைக்க வாய்ப்பு இல்லாததால் கடலுக்கு அடியில் சுரங்கவழிச் சாலை அமைக்க ஆலோசணை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.