அதிரை நியூஸ்: ஜன.20
சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தின் ஜவோதோங் நகரின் லுதியான் எனும் சிற்றூரைச் சேர்ந்த சீனப்பெண் தனது சிறுவயது மகனை வீட்டில் செலவுக்கு வைத்திருந்த பணத்தை திருடிவிட்டான் என்று குற்றம் சுமத்தி தனது மகனின் இருகைகளையும் கயிற்றால் பிணைத்து பின் அந்தக் கயிற்றை தனது ஸ்கூட்டரின் பின்புறம் கட்டி அவனது நெஞ்சுப் பகுதி தேய தேய ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றுள்ளார், இந்த தண்டனையை கடந்த இரண்டு மூன்று தினங்களாக தொடர்ந்து தந்து வருவதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இந்தப் பணம் தனது குடும்பத்தின் ஒரு மாத செலவுக்கானது. எனது கணவர் குறைவான வருமானம் உடையவர், அவரால் மாதத்திற்கு 3,000 ரென் மின் பி (Ren Min Bi - RMB) சைனீஸ் யுவான்களை (ரென் மின் பி= மக்கள் பணம் என பொருள் தரும் RMB Chinese Yuan) தர முடிகிறது அதிலிருந்து 2,000 ரென் மின் பிக்களை (RMB) இவன் களவாடிச் சென்று விட்டான். எவ்வளவு கேட்டும் அந்தப் பணத்தை என்ன செய்தான் என்பதை சொல்ல மறுக்கிறான் என்பதாலேயே அவனை அச்சுறுத்தும்விதமாக அவ்வாறு செய்தேன் என போலீஸாரிடம் தெரிவித்தார்.
கடைசியாக, லுதியான் கவுண்டி போலீஸார் அந்தத் தாயை எச்சரித்து மட்டும் அனுப்பிவிட்டனர். அந்தப் பையன் போலீஸாரிடமாவது உண்மையைச் சொன்னானா? பணம் திரும்பக் கிடைத்தது என்பது பற்றி தகவல் இல்லை. சரி, விஷயம் போலீஸ் வரை போனது எப்படி? வழமைபோல் சாலையில் சென்றோர் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டது தான் காரணம். குறைந்தபட்சம் சமூக இணைய தளங்கள் இப்படியாவது பயன்படுவது நல்லதே.
:https://www.mirror.co.uk/9db25175-af60-4298-b732-e2eb99afff3d
Source: Mirror
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.