.

Pages

Friday, January 26, 2018

அதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொதுமருத்துவ முகாம்!

ஆயுர்வேத மருத்துவர் சண்முகப்பிரியாவுடன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் ஆலோசனை
அதிராம்பட்டினம், ஜன.26
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் மற்றும் மதுரை தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு (வாய்க்கால் தெரு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை (ஜன.27) சனிக்கிழமை காலை 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கிறது.

இதில், மதுரை தன்வந்திரி வைத்தியசாலை ஆயுர்வேத மருத்துவர் எஸ். கார்த்திக்வேல் தலைமையிலான ஆயுர்வேத மருத்துவர்கள் என்.சண்முகப்பிரியா, ஏ.செந்தில் குமார் மற்றும் மருத்துவக்குழுவினர், மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முகாம் ஏற்பாட்டினை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் செய்து வருகின்றனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு தொடர்புக்கு: 9894555982

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.