.

Pages

Saturday, June 30, 2018

தஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி!

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 2175 வாக்குச் சாவடிகளும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு  செய்யப்பட்டு வருகிறது.

நகர்ப்புறத்தில் 1400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்படி  இரண்டு வாக்கு சாவடிகளாக பிரிக்கப்படவுள்ளது.

வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பதை ஆய்வு செய்யும் பணி 21-6-2018 முதல் நடைபெற்று வருகிறது. 02-07-2018 அன்று வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் காலை 11.30 மணியளவில் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகங்களில் வெளியிடப்படவுள்ளது. அந்தந்த சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தொடர்புடைய வட்ட அலுவலகம் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய வட்ட அலுவலகத்தில் 1-07-2018 வரை  வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பான கருத்தருக்களை எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பான  கலந்தாய்வு கூட்டம்  தொடர்புடைய வட்ட அலுவலங்களில் 1-07-2018 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும்.
 
அதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளபடி. உரிய திருத்தங்களுடன் திருந்திய மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

மேலும், தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டவர்கள். மற்றும் 1-1-2018 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 1-1-2000 ஆண்டு வரை பிறந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட அலுவலகத்தில் அளிக்கலாம் என்று  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்தை ~ மகன் இணைந்து கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 30
மனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவியை தந்தை மகன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

சுறா மீன்கள் மனிதர்களையும் சீற்றத்துடன் தாக்கும் தன்மையுடையவை. ரீ-யூனியன் தீவில் (Re-Union Island) 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலகிலேயே மிக அதிகமாக சுமார் 16 சதவிகித சுறா தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக சுறா தாக்குதல்கள் குறித்த சர்வதேச ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் கார்டிப் நகரைச் சேர்ந்த தந்தையும் மகனுமான கோலின் மற்றும் சைமன் புரூக்கர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கடந்த சில வருடங்களாக ஆய்வு செய்து சுமார் 250,000 யூரோக்களை செலவு செய்து இந்த செயற்கை துற்நாற்றக் கருவியை கண்டுபிடித்து வெற்றிகரமான சோதனைகளை செய்துள்ளனர்.

செத்த சுறா மீனின் வாடையை செயற்கையாக வெளியாக்கும் இந்த கருவியை பற்றி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது இவர்களை 'மறைகழண்டவர்கள்' என ஒதுக்கித் தள்ளியதாம். தற்போது ரீ-யூனியன் தீவில் பலமுறை பரிசோதனைகளை மேற்கொண்டு நிரூபித்தபின் அரசு ஆதரிக்க முன்வந்துள்ளதாம்.

பொதுவாக சுறா மீன்கள் தன் இன சுறாக்களை உண்ணாது என்ற உண்மையின் அடிப்படையில் என்னுடைய ஆய்வுகளை தொடர்ந்தேன். இந்த ஆய்வின் முடிவில் செத்த சுறா மீனின் வாடையை உயிருள்ள மற்ற சுறாக்கள் விரும்புவதில்லை என அறிந்து கொண்டேன். அதனடிப்படையிலேயே இந்த செயற்கை செத்த சுறா துற்நாற்ற கருவியை உருவாக்கினேன் என கோலின் விபரித்தார்.

இதன் மூலம் கடலில் நீந்தும், நீர்ச்சறுக்கு (Surfing) விளையாட்டில் ஈடுபடுவோர் மட்டுமல்ல பிற கடல் வாழ் உயிரினங்களும் தப்பிப் பிழைக்கும் எனவும் தெரிவித்தார். தற்போது அரசு விஞ்ஞானிகளின் பரிசோதனைகளின் கீழ் உள்ள இந்தக் துற்நாற்றக் கருவிகள் 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர் தந்தை மகன் ஆராய்ச்சியாளர்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூன் 30
உலகின் சுமார் 80 நாடுகளிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை நிறைவேற்ற புனித யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர், இந்நிகழ்வுகளுக்கிடையில் ஒருபுறம் சிரியாவின் கொடுங்கோல் அரசு, இன்னொரு புறம் சவுதிக்கும் சிரியாவுக்கு ராஜரீக உறவுகள் பாதிக்கப்பட்ட நிலை, மற்றொருபுறம் பொதுமக்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நாடு நாடாக அடைக்கலம் தேடியலையும் அவலம்.

இத்தைய துன்பியல் நிகழ்வுகளுக்கு இடையிலும் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டின் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற 18,000 சிரிய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் அவர்களுடன் உடன் வரும் மருத்துவர் மற்றும் அரசுத் தரப்பு உதவிக்குழுக்கள் என 850 பேருக்கும் ஹஜ் செய்யத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பிற நாடுகளின் ஹஜ் பயணிகளைப் போலவே இவர்கள் மக்கா, மதினா மற்றும் இதர புனித ஸ்தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளதை சர்வதேச முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் யூசுப் அல் உதைமீன் அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள அல் ஹஸா நகரம்!

அதிரை நியூஸ்: ஜூன் 30
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள அல் ஹஸா நகரம்

பேரீத்த மர தோட்டங்களால் சூழப்பட்ட உலகின் மிகப்பெரும் பாலைவனச் சோலை நகராகவும், வேட்டைக் களமாகவும், முதலாம் உலகப்போரின் கல்லறைகளுடனும் திகழும் அல் அஹ்ஸா நகரம் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் அதன் வரலாற்றுச் சிறப்புகளைப் போற்றும் வகையில் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்படவுள்ளது.

அல் அஹ்ஸா எனப்படும் அல் ஹஸா நகரம் முன்பு பஹ்ரைன் என்றும் பின்பு ஹஜர் என்று அழைக்கப்பட்டது. இதன் பாலைவனச் சோலை 379 கி.மீ சுற்றளவிற்கு பரவியுள்ளதுடன் சுமார் 1.3 மில்லியன் மக்களும் இங்கு வாழ்கின்றனர். பண்டைய கால வியாபார வழித்தடமாக விளங்கியதுடன் தற்போதும் அண்டை வளைகுடா நாடுகளையும் இந்திய துணைக்கண்டத்தையும் இணைக்கும் முக்கிய துறைமுக நகராகவும் அரேபியன் வளைகுடாவை பிற உலகநாடுகளுடன் இணைக்கும் நுழைவாயிலாகவும் விளங்குகின்றது.

மனித குடியேற்றங்கள் முதன்முதலாக அமைந்த வளைகுடா பிரதேசங்களில் அல் ஹஸா நகரும் ஒன்று என வரலாற்றாளர்களால் கணிக்கப்படுகிறது.  (it is now categorized as one of the oldest human settlements in the Arabian Peninsula).

அல் அஹ்ஸாவில் காணப்படும் நாகரீகம் லேவண்ட் (சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், சிப்ரஸ், இராக், லெபனான், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பகுதிகள், துருக்கியின் ஒரு சில பகுதிகள்) எகிப்து மற்றும் மெஸப்படோமியாவிலும் (இராக், குவைத் மற்றும் சவுதியின் வட பகுதிகள்) காணப்பட்டன. ஏமனையும் இராக்கையும் இணைக்கும் பாலைவன வழித்தடத்தில் அமைந்துள்ளதுடன் இங்குள்ள அல் உகைர் துறைமுகம் வளைகுடா நாடுகளை பண்டைய காலம் முதல் கடல்வழியாகவும் இணைக்கின்றது.

உலகின் இயற்கையான விவசாய பாலைவனச் சோலையாக (one of the largest natural agricultural oasis in the world) வர்ணிக்கப்படும் இங்கு 10,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலத்தில் பல்வேறு ரகங்களில் பேரீத்தம் பழங்கள் விளைவிக்கப்படுவதுடன் அரிசி, பழங்கள் போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.

இங்கு சுமார் 60 முதல் 70 வரையிலான நீர்ச்சுனைகள் உற்பத்தியாகின்றன. இதில் 32 டிகிரி செல்ஷியஸ் வரை தகிக்கும் சுடுநீர்சுனைகளும் உள்ளன. இவற்றில் மிகப்பிரசித்திப் பெற்றது 'ஐன் நுஜூம்' எனப்படும் நீர்ச்சுனையும் ஒன்றாகும். இந்நீரில் நோய் நிவாரணம் தரும் சல்பியூரிக் (கந்தக) அமிலம் கலந்து சூடான நீராக வெளியாவது சிறப்பான ஒன்றாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

புனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல்லை பாதுகாக்கும் காவலர்கள்!

அதிரை நியூஸ்: ஜூன் 30
புனிதமிகு கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டு அதனைச் சுற்று வெள்ளியிலான கவசம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புனிதக் கருப்புக்கல்லை தொட்டு முத்தமிட அல்லது கைகளால் தொட்டாவது திருப்தி கொள்ள என ஹஜ் மற்றும் உம்ரா போன்ற புனித யாத்திரைகளுக்கு வந்திருக்கும் யாத்ரீகர்கள் முயற்சிப்பார்கள். இந்த கருப்புக்கல் தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் உள்ளதுடன் தவாப் சுற்றலின் ஆரம்பம் மற்றும் முடிவின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இந்த கருப்புக்கல்லை பாதுகாக்க சிறப்பு பயிற்சி பெற்ற 24 காவலர்கள் மணிக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பாதுகாக்கின்றனர். இந்த சிறப்புக் காவலர்கள் பல்வேறு உடற்தகுதி மற்றும் தகிக்கும் வெயிலின் சூட்டை தாக்கும் சக்தி ஆகியவற்றை பின்னனியாக கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் கருப்புக்கல்லையும் அதனை முத்தமிட முயற்சிக்கும் மக்களையும் தொடர்ந்து கண்காணிப்பதுடன் பலரும் இக்கல்லை பாதுகாப்புடன் முத்தமிடவும் உதவியும் செய்வார்கள்.

இந்த கருப்புக்கல் ஒரே பாறை துண்டு அல்ல மாறாக இது 8 துண்டுகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன் ஆகப்பெரிய துண்டு ஒரு பேரீத்தம் பழத்தின் அளவே உள்ளது என்பதும் ஆச்சரியமான தகவலே. இந்த ஹஜருல் அஸ்வத் உள்ள பகுதி ஒவ்வொரு வக்து தொழுகையின் பின்பும் சுத்தம் செய்யப்படுவதுடன் கிருமி நாசினிகள், பன்னீர், அவுத் நறுமணம் பூசப்படுவதுடன் இதற்கெனவே தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பு பொருட்களை கொண்டும் சுத்தப்படுத்தப்படுகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற மனிதர்கள்!

அதிரை நியூஸ்: ஜூன் 30
பொதுவாக மனிதர்களை தான் வீட்டை விட்டுத் துறத்துவோம் அல்லது உன்னை எல்லாம் நடுரோட்ல விட்டாத்தாண்ட புத்தி வரும் என்றாவது கோபத்தில் சொல்வோம் ஆனால் அமெரிக்காவில் யாரோ சில மனிதர்கள் தங்களுடைய வீட்டையே நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர், என்ன கோபமோ தெரியல!

அமெரிக்காவின் 49வது மாநிலமாகவும், மிகச்சிறிய மாநிலங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது டிலாவர் (Delaware), இதன் தலைநகரம் டோவர்  (Dover). இது மேரிலாண்ட், பென்சில்வேனியா, நியூ ஜெர்ஸி மற்றும் அட்லாண்டிக் கடல் ஆகியவற்றிற்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் குட்டி மாநிலமாகும். அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட 6 வது மாநிலமும் ஆகும்.

போர்டோகேபின் (Portocabin) எனச் சொல்லப்படுகின்ற செயற்கை இழைகளால் (Prefabricated House) உருவாக்கப்பட்ட (பங்கர் என்ற பெயரிலும் சில இடங்களில் அழைக்கப்படும்) வீடு ஒன்றை டோவர் நகரின் இருவழிச் சாலையின் நடுவே இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் யாரோ சிலர். இதனால் போக்குவரத்தையே திசை திருப்பிவிட வேண்டி வந்ததாம்
போலீஸாருக்கு.

ரோட்டில் வீட்டையே இறக்கி வைத்துச் சென்ற மனிதர்கள் இது பெரிய அளவு வீடு (oversize) என்ற போக்குவரத்து எச்சரிக்கை பேனரையும் பொறுப்பாக விட்டுச் சென்றுள்ளனர் என திலாவர் மாநில போலீஸார் சிரிக்கின்றனர்.

Source: Emirates 247 / AP
தமிழில்: நம்ம ஊரான்

துபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் சேவை தொடக்கம் ~ பஸ் நிறுத்துமிடங்கள்(முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
துபை - ஷார்ஜா இடையே புதிய தடத்தில் 30 நிமிடங்களில் செல்லும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

துபை - ஷார்ஜா இடையேயான பயணம் என்பது உலகின் மிக நெரிசலான பயணங்களில் ஒன்றாகும். சிறிய வாகனங்களில் செல்வதால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் இப்புதிய தடத்தில் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷார்ஜாவை ஒட்டிச் செல்லும் மெட்ரோ சேவையால் பெருமளவு சிறியரக வாகனப் பயன்பாடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

E311 என பெயரிடப்பட்டுள்ள புதிய துபை - ஷார்ஜா தடத்தின் சேவை ராஷிதியா மெட்ரோ நிலையத்தில் இருந்து துவங்கி ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு வழியாக ஷார்ஜாவின் அல் ஜூபைல் பஸ் நிலையத்தை சென்றடையும், அதேபோல் மறுபுறமும் சேவை நடைபெறும் என துபை போக்குவரத்து துறை (RTA) தெரிவித்துள்ளது.

இடைவரும் நிறுத்தங்கள்:
1. நேஷனல் பெயிண்ட்ஸ் (இன்டஸ்ட்ரியல் ஏரியா)
2. மலீஹா ரோடு இன்டஸ்ட்ரியல் ஏரியா இன்டர் சென்ஷன் மற்றும் மலீஹா ரோடு ஸபா இன்டஸ்ட்ரீஸ்
3. மலீஹா ரோடு GEGO மினார்வா
4. மலீஹா ரோடு முனிஸிபாலிட்டி ஆபீஸ்
5. மலீஹா ரோடு 2nd இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன் - பி1
6. மலீஹா ரோடு 2nd இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன் - ஏ1
7. மலீஹா ரோடு J&B இன்டஸ்ட்ரியல் ஜங்ஷன்
8. மலீஹா ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன் - பி1
9. மலீஹா ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன் - ஏ1
10. கிங் பைசல் ரோடு மாஸா சிக்னல் ஜங்ஷன்
11. கிங் பைசல் ரோடு பிரிட்ஜ் (மேம்பாலம்)
12. கிங் பைசல் ரோடு ஜம்போ (சோனி)
13. கிங் பைசல் ரோடு அட்னாக் பெட்ரோல் நிலையம்
14. கிங் பைசல் ரோடு கோல்டு சூக் (OLD)

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

தொட்டு விடாதே! எட்டி நில்!! எச்சரிக்கும் துபை ஆம்புலன்ஸ் சேவை கழகம்!

அதிரை நியூஸ்: ஜூன் 30
துபையில் விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவவே மனிதமனங்கள் பொதுவாக விரும்பும் ஆனால் அத்தகைய மனிதாபிமான உதவிகள் சற்றே பிசகினாலும் உங்களை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதால் கடுமையான வாகன விபத்தில் சிக்கிவோரை மீட்கப்போய் மாட்டிக் கொள்ளாதீர் என எச்சரித்துள்ளது துபை ஆம்புலன்ஸ் சேவைக் கழகம்,  (Dubai Corporation for Ambulance Services - DCAS) ஏன்?

விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்று உங்களுடைய மனம் விரும்புவது வரவேற்கத்தக்கதே என்றாலும் உங்களுடைய அதீத ஆர்வத்தால் விபத்தில் சிக்கியவருக்கு மேலும் காயங்களோ, உடல் ஊனமோ அல்லது மரணமோ விளையக்கூடும், இந்நிலை நீங்கள் மனிதாபிமானத்துடன் உதவப்போய் ஊனமோ, மரணமோ ஏற்பட்டதால் சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை பெறக்கூடும் என விளக்கமளித்துள்ளது DCAS.

துபையில் அதிகப்பட்சம் 8 நிமிடத்திற்குள் மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையிலேயே கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கான உதவிகளை மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியெல்லாம் 999 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிப்பது மட்டுமே.

மேலும், துபையில் ஆம்புலன்ஸ் சேவை கழகத்தினரால் 3 கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் வென்று சான்றிதழ் வைத்திருப்போரும் விபத்து காலங்களில் களமிறங்கி உதவலாம் என்றாலும் அவர்களும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர் தகவல் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசணையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Apart from paramedics, doctors and those who have obtained a certification after passing a three-stage medical training course from DCAS can attend to a patient but they will also have to be in touch with the operations room.

மனிதர்கள் எப்போதும் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களே என்பதையும் நாங்கள் அறிந்துள்ளதால் ஒரு நல்ல மாற்றுத் திட்டமாக விரைவில் இத்தகைய சமூக ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு அவர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றோம் இப்பயிற்சியின் மூலம் அவர்கள் முறையான சட்டபூர்வ மருத்துவ உதவியாளர்களாக உதவ வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாகவும் ஆம்புலன்ஸ் சேவைக் கழகம் தெரிவித்துள்ளது.

“We believe that people are ready to help, they just need the proper skills. We are soon announcing new volunteer opportunities for those who would like to get the right training and become qualified in providing medical assistance,”

இதற்கிடையில், சாலை விபத்துக்கள் மற்றும் அவசரகால உதவி தேவைப்படுவோரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பிற வாகன ஓட்டுனர்கள் மீது கடும் அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு  தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட தேர்வு முகாம்  வருகின்ற 21-07-2018 முதல் 29-07-2018 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.  தகுதியுள்ள திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு முகாமில் கலந்து  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (29-06-2018) தெரிவித்துள்ளார்.

விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 03-01-1998ற்கும் 02-1-2002ற்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது. திருமணமாகதாவராக இருக்க வேண்டும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மொத்த மதிப்பெண்களும். ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.

1.6 கிலோ மீட்டர் தூரத்தினை  6 நிமிடங்கள் 30 விநாடிகளுக்குள் கடக்கும் திறன், ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உடல் தள்ளும் திறன் (PUSH UPS), ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழும் திறன் (SIT UPS), ஒரு நிமிடத்திற்குள் 20 முறை குந்தி எழும் திறன் (SQUATS)  ஆகிய உடற் தகுதிகளை பெற்றிருக்க  வேண்டும்.

குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரமும், உயரத்திற்கு தகுந்தாற்போல் உடல் எடையும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உடையவராகவும். எவ்வித தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.  இரு கண்களும்  6-36 என்ற அளவில் தூரப்பார்வை திறனும். ±3.50D-க்கு  மிகாமல் கிட்டப்பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியிருந்தால் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டார்.

மேலும் விபரங்களுக்கு www.airmenselection.gov.in மற்றும் www.airmenselection.cdac.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
சிவகங்கை மர்ஹூம் சுல்தான் ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முகமது அவர்களின் மனைவியும், சல்மான் ஃபார்ஸி அவர்களின் முப்பாட்டியாரும், ஹாஜி சேக்காதி அவர்களின் சம்பந்தியும், ஜலீல், இலியாஸ், ஜஹபர் சாதிக் ஆகியோரின் பாட்டியாருமாகிய முத்து பீவி (வயது 100) அவர்கள் நேற்று இரவு புதுத்தெரு தென்புறம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)

அதிரை நியூஸ்: ஜூன் 30
அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம் 'கோமேனி' என்கிற முகமது கவுஸ் அவர்களின் மருமகனும், ஜெய்னுலாபுதீன், முஹம்மது, ரியாளுதீன் ஆகியோரின் தகப்பனாரும், யாசர் அரபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லா (வயது 53) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் பிலால் நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2018) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, June 29, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தேதி முதல் இயக்கம்: முதல் 3 மாத கால அட்டவணை (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, ஜூன் 29
பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இடையே வாரம் இருமுறை சிறப்பு பயணிகள் ரயில் சேவை வரும் ஜூலை 2 ம் தேதி முதல் பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வரை உள்ள அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 1 ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பயணிகள் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 26 ல் நடைபெற்றது. இதன்பின்னர், காரைக்குடி ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் ( (DEMU) Diesel Electric Multiple Unit) சேவை மார்ச் 30 ந் தேதி இயக்கப்பட்டது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இடையே முதல் சேவை  ஜூன் 30ந் தேதி (சனிக்கிழமை) இயக்கப்பட்டு, பின்னர், ஜூலை 2 ம் தேதி முதல் வாரம் இருமுறை (பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமை) சிறப்பு பயணிகள் ரயில் சேவை 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.

ரயில் கால அட்டவணை விவரங்கள்:
TRAIN NO: 06856 காரைக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (06.28 - 06.29),
பெரியக்கோட்டை (06.43 - 06.44),
வளரமாணிக்கம் (06.59 - 07.00),
அறந்தாங்கி (08.20 - 08.22),
ஆயங்குடி (08.31 - 08.32),
பேராவூரணி (09.45 - 09.47),
ஒட்டாங்காடு (10.55 - 10.56) வழியாக மதியம் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.

அதேபோல், TRAIN NO: 06855 பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (14.20 - 14.21)
பேராவூரணி (15.30 - 15.32),
ஆயங்குடி (16.44 - 16.45),
அறந்தாங்கி (16.55 - 16.57),
வளரமாணிக்கம் (18.17 - 18.18),
பெரியக்கோட்டை (18.33 - 18.34),
கண்டனூர் புதுவயல் (18.49 - 18.50) வழியாக இரவு 7.30 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இடையிலான 73 கி.மீ தூரத்தை கடக்க 6 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது. அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.

- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)

தஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!

நுகர்வோர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு ஆடி மாத சிறப்பு குலுக்கல். ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிருஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பண்டிகைகளை முன் வைத்து பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துவதன் மூலம் பொருட்களின் விலை கூட்டியும், அளவை குறைத்தும், தரமற்ற மற்றும் பழைய மற்றும் கலப்பட விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

மேற்படி செயல்கள் பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978. தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி பரிசுப்போட்டிகள் நடத்துவது சட்டத்திற்கு விரோதமான செயலாகும்,  மேலும், மேற்படி சட்டங்களை மீறி பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம்  தெரிவிக்கப்படுகிறது.

எனவே, நுகர்வோர்கள் மேற்கண்ட பரிசுத்திட்டங்களை  கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்வாறு பரிசுத்திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்களின் மீது பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்: ஆட்சியர் கெளரவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (29.06.2018) பணி நிறைவு பெறும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் இரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலர் மணி, திருமண்டலங்குடி சக்கரை ஆலை துணை ஆட்சியர் சகாயராஜ் அவர்களையும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வரும் கோவிந்தராசு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதலாகி செல்வதால் ஆகியோர்களுக்கு சால்வை மற்றும் நினைவு  கேடையத்தினை  வழங்கி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (பொ) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 29
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினத்தில் திடிரென மேகக்கூட்டம் சூழ்ந்துகொண்டு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானத்தின் மற்றொரு பகுதியில் பல வண்ணத்துடன் அழகிய வானவில் தோன்றி பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்தது.

'அதிரை நியூஸ்' வாசகர் பக்கீர் முகைதீன் நமக்கு எடுத்து அனுப்பிய வானவில் படங்கள்:
 

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஜூன் 29
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 ந் தேதி கோவையில் கொஜீரியோ கராத்தே கழகம் நடத்திய தேசிய அளவிளான கராத்தே போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி என். சிம்லாதேவி, 10 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட “கட்டா” பிரிவில் முதல் பரிசும் 40 கிலோ எடை சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மேலும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.நிகிலேஷ்வரன் 25 கிலோ எடை சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் என்.நாடிமுத்து (A Dan Black Belt) ஆகியோரை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், முதல்வர் என்.ரகுபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ந் தேதி சாலை மறியல்!

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்கரை பகுதி ரயில் நுகர்வோர் குழு நிறுவனர் தம்பிக்கோட்டை ராஜாராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;

அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட திருவாரூர் ~ காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ~ அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் ரயில் போக்குவரத்து இல்லாததால், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்ட கடற்கரைப் பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தம்பிக்கோட்டை வருவாய் சரக ரயில் பாதையிலிருந்து தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவாக்காடு ஆகிய 3 ரயில் நிலையங்களை அகற்றுவதுடன், 7 ரயில்வே கேட்டுகளை அகற்ற இருப்பதாக தெரிகிறது.

தஞ்சாவூர் ~ திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 63 கிராம மக்கள் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தாமல் தகுதி குறைந்த தில்லைவிளாகம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி 63 கிராம மக்களை  அலைகழிப்பதை ஏற்க முடியாது.

மேற்கண்ட கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர் ரெங்கராஜன் தலைமை தாங்குகிறார். இதில், 3 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் 6-ந் தேதி ஒத்திவைப்பு!

மல்லிபட்டினம், ஜூன் 29
தஞ்சை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாநில செயலாளர் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்கத் தலைவர் அ.தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலார் க. வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க முன்னாள் தலைவர் து. செல்வக்கிளி, தலைவர் மு.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கடந்த 24ந் தேதி சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 29) மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் குறித்து கடந்த 27 ந் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை கூறியதை அடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில், விசைப்படகு உரிமையாளர்களை, துறை அலுவலர்கள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் எனக்கூறியும், அதிகாரிகள் அழைத்துப் பேசாதது வருத்தமளிக்கிறது. மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறைக்கு மதிப்பளித்தும், வருவாய்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீன்துறை அலுவலர்களுக்கு கால அவசகாசம் அளிக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 29) மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் காலை 9 மணிக்கு நடைபெற இருந்த மறியல் போராட்டம் வரும் (ஜூலை 6) வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Thursday, June 28, 2018

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

அதிரை நியூஸ்: ஜூன் 28
இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம் உள்ளடக்கிய, அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழுரிமை கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்று அரசியலமைப்பு சட்டம், 1950 சொல்கிறது. அந்த சட்டங்களை காலடியில் போட்டு மிதித்த எமர்ஜென்சி என்ற அவசர காலம் 1975  -1977 வரை 21 மாத காலங்கள் இருந்தன. அந்த காலச் சுவடுகள் அழிந்து 41 ஆண்டுகள் ஆகின்றன. அதனைக் கொண்டாடும் விதமாக இன்றைய மத்தியில் ஆளும் அரசு ‘கருப்பு நாள்’ கொண்டாடுகிறது. ஆனால் அந்த நாட்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது என்று சமீபகால நடவடிக்கைகள் சொல்கின்றன. யார் எமர்ஜென்ஸிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார்களோ அவர்களே இன்று  மக்கள் தங்கள் உரிமைக்காக, உயிர் வாழ்வதற்காக போராடும்போது அவர்களை தீவிரவாதிகளாக வர்ணம் பூச நிணைப்பது ஒரு அதிகார மமதையில் செய்யும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

எதிர்க் கட்சியில் இருந்தபோது போராடியவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அவர்களுடைய ஊரையடித்து உலையில் போடும் செயலையும், அடாவடி அரசியலையும் எதிர்க்கும் தன்னுடைய சொந்த மக்கள் மீது காவல் துறையினர், ராணுவத்தினர் கொண்டு அடக்குமுறை செயலில் ஈடுபடுவது உலகெங்கும் நடந்து கொண்டு தான்  உள்ளது.

மக்கள் போராட்டங்களால் மகுடங்கள் உருண்ட பல சம்பவங்கள்  உள்ளன. அவை எவை எனப் பார்க்கலாம்:
1) ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி 1760  ல் ஏற்பட்டு தொழிலாள-முதலாளி என்ற வர்க்க யுத்தம் ஏற்படும் பொது முதலாளி வர்க்கத்திற்கான எதிரான  புரட்சிக்கு வித்திட்டது. 1789 ல் மன்னர் ஆட்சிக்கு எதிரான புரட்சி பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டு மன்னராட்சி அகட்டப் பட்டது. 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சி மூலம் ரஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

2) 1989 ம் ஆண்டு சீனாவில் மாணவர் எழுச்சியில் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘டினமென்’ மைதானத்தில் கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் 10000 பேர்களை ராணுவ டேங்குகளை கொண்டு நசுக்கியது ஒரு வரலாற்று அடக்குமுறையாக கருதப் படுகிறது.

3) ஜப்பானில் உள்ள புகிஷிமாவில் அணு சோதனை நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தினைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அணு நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து அது ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் பரவியது.

4) அதே போன்ற எழுச்சிகள்  வட அமெரிக்கா, ‘அரப் ஸ்பிரிங்’ என்ற புரட்சி டூனிஷிய, எகிப்த், சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டது. 2001 ம் ஆண்டு ஆப்கான் மக்கள் மன்னர் சாகிர் சாவிற்கு எதிராக புரட்சி செய்தார் என்பதும் வரலாறு.

5) இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான புரட்சி 1857 ல் சிப்பாய் கலகமக துவங்கி ஆட்சி மாற்றத்தினை 1947ல் காண முடிந்தது. சுதந்திரம் அடைந்த பின்பு 1975 ம் ஆண்டு எமெர்ஜென்சி என்ற அவசரகால நடவடிக்கை துவங்கியபோது அனைத்து மக்களும், எதிர்கட்சிகளும் போராட்டத்தினை துவங்கின. அதன் பயனாக 1977 ல் ஆட்சி மாற்றத்தினைக் காண முடிந்தது. அப்போது போராடிய தலைவர் கள் ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மேராஜி தேசாய்  யாரையும் தீவிர வாதிகள் என்று இன்றைய ஆட்சியினர் சொன்னதில்லையே அது ஏன்? அது மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தல் நெய்குடம் என்று சொல்லுவது போன்ற செயலாகாதா?

6) 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ல் புது டெல்லி ஆம் ஆத்மீ  அரசினை கண்டித்து ப.ஜ.க ஆர்ப்பாட்டம் செய்ததே அது தீவிரவாத செயலா?

7) அல்லது தற்போதைய ராஜஸ்தான் ப. ஜ. க அரசு டாக்டர்களை பழி வாங்குகிறது என்று போராடுகிறார்கள் அது தீவிரவாத செயலா?

8) உ.பி.ஏ. என்ற காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது அரசுக்கு எதிராக அண்ணா ஹஸாரே போராடியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் ஆர்ப்பாட்டம் செய்தும், பிரதமர், காங்கிரஸ் தலைவி வீட்டிலும் மறியலில் ஈடுபட்ட இன்றைய மத்திய அமைச்சர் தளபதி வி.கே.சிங், இன்றைய புதுச்சேரி ஆளுநர் கிரேன் பேடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராம்தேவ் போன்றோர் தீவிரவாதிகளா?

9)  அவ்வாறு மக்கள் போராட்டங்களை தீவிரவாத செயல்கள் என்றால் 1947 சுதந்திரத்திற்காக போராடியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?

10) 1965 ல் ஹிந்தி திணிப்பினை எதிர்த்து போராடியவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?

11)  1972 ம் ஆண்டு தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். பொதுக் கூட்ட மேடையில் அந்தக் கட்சியின் வரவு செலவு கேட்டு தி.மு.காவிலிருந்து நீக்கப் பட்டபோது தமிழகம் முழுவதும் மக்களிடம் நீதியினை கேட்கப் போகிறேன் என்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அவர் என்ன தீவிரவாதியா?

இந்திய நாடு சுதந்திரத்திற்கு முன்பு 85 சதவீதம் விவசாயிகள் நாடாக இருந்தது. மக்கள் பசி,பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் இன்று வெறுமனே 55 சதவீத மக்களே விவசாயம் செய்யும் மக்களாக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் வாழ்வாதாரம், பருவமழை பொய்த்ததாலும், அதிக வட்டி வாங்கி விவசாயம் செய்வதாலும், அரசு விவசாயிகளை மானியம் மூலம் ஊக்குவிக்க முடியாததாலும், பம்ப் செட்டுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியாததாலும், மோட்டோருக்கு தேவையான டீசல் விலை அதிகரித்தாலும், விவசாயத்திற்கான விதை, யூரியா போன்ற பொருள்கள் விலை ஏற்றத்தாலும், பல்வேறு சாலை அமைக்க விவசாயிகள் நிலம் கையாகப் படுத்துவதாலும் விவசாயிகள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.

விவசாயிகள் நிலங்கள் இயற்கை வாயு, நியூட்ரினோ போன்ற திட்டங்களால் கையாகப் பட்டபோது தங்கள் நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுமே என்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் தீவிரவாதிகளா?

இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பி.ஜெ.பி. ஆளும் மாநிலங்களில் நடந்தபோதும், அங்குள்ள தேசிய நெடுசாலை முடக்கப் பட்டபோதும், ரயில் நிலையங்கள் மறிக்கப் பட்ட போதும் யாரும் அவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தவில்லை.

மத்திய பிரதேச 'கிசான் மாசதுர் சங்கம்' அது ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் தலைவர் ‘திரிலோக கோதி’ தலைமையில் அங்கு விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கி சூட்டினை கண்டித்து நடத்தப் பட்ட ‘மண்டேசர்’ ரோடு மறியலை ஒரு தீவிரவாத செயலாக சித்தரிக்க வில்லையே, அது ஏன் என்று மக்களுக்கு கேட்க உரிமை இல்லையா?

ஆனால் தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு, சுற்றுப் புறசூழல் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை போன்றவற்றிக்கு எதிரான போராட்டங்களை பொறுப்பிலுள்ளவர்கள் தீவிரவாத செயல் என்று கொச்சைப் படுத்தலாமா?

நமது நாட்டின் அரசியல் நடவடிக்கைகளாக நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து குஜராத் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 17 ,000 கோடி பழைய நோட்டுக்கள் மாற்றப் பட்டுள்ளன அதில் பி.ஜெ.பி. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி செய்திகள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், தலித், கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம்கள் மீது பசுவைக் காப்பாற்றுகிறோம் என்று நடத்தப்படும் தாக்குதல், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை உலக அளவில் முதலிடம் பிடித்த பெருமை, நடு நிலை எழுத்தாளர்கள் மீது தாக்கப்படும் வன்முறை ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அவர்களுடைய மனக்குமுறல் மற்றும் பத்திரிக்கை, தொலைக் காட்சிகள் மூலம் அறிந்துள்ளீர்கள். அதுபோன்று நடக்கவில்லை என்று எந்த நபரோ, அரசோ கூறுமேயானால் அது முழு பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் செயலாகவே கருதவேண்டும்.

ப.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வத் சின்ஹா, 'இந்தியாவில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடக்கின்றது, அது ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று 25. 6. 2018 பேட்டியில் கூறியுள்ளார். அதனை நிரூபிக்கும் விதமாக, 'இம் என்றால் கைது நடவடிக்கை, இச் என்றால் குண்டர் சட்டம்' என்று அடக்குமுறை ஆட்சி நடத்துவது நியாயம் தானா என்று நடு நிலையாளர்களும், மக்களும் கேள்வியினை எழுப்புவது நியாயம் தானே!

மக்களிடம் முந்தைய ஆட்சி காலங்களில் குறைகளை சுட்டிக் காட்டி அரியணையில் ஏறியதும் அதே குறைகளை இன்றைய ஆட்சியினர் செய்ததும் அதனை தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற செயலாக என்ற கேள்விக்கு பதிலினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

அமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்தது !

அதிரை நியூஸ்: ஜூன் 28
அமீரகத்தில் ஜூலை மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை குறைந்தது

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அமீரகத்தில் சில்லறை பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது அறிந்ததே.

கடந்த 2 மாதங்களாக அமீரகத்தில் கடும் விலையேற்றம் கண்டுவந்த சில்லறை பெட்ரோல் விலையில் சற்றே குறைக்கப்பட்டு ஜூலை மாதத்திற்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது, வாட் வரி உட்பட.

சூப்பர் 98 - 1 லிட்டர் 2.56 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.63)
ஸ்பெஷல் 95 - 1 லிட்டர் 2.45 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.51)
டீசல் - 1 லிட்டர் 2.66 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.71)

Source: Msn
தமிழில்: நம்ம ஊரான்

துபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி!

அதிரை நியூஸ்: ஜூன் 28
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தில் காய்கறி விவசாயம்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் கிராப் ஒன் (Crop One) நிறுவனமும் இணைந்து சுமார் 40 மில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய செங்குத்து அடுக்கு விவசாய பண்ணை (Vertical Farming) ஒன்றை துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்கின்றன. இந்தப் பண்ணை 130,000 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது என்றாலும் இங்கு விளையும் காய்கறிகள் 900 ஏக்கர் பரப்பளவில் விளையும் காய்கறிகளுக்கு ஈடான விளைச்சலை தரும்.

இங்கு விளையும் கீரை மற்றும் காய்கறிகளை ஒரே நேரத்தில் 2,700 கிலோ அளவிற்கு அறுவடை செய்யப்படும். இந்த செங்குத்துப் பண்ணைகள் பூச்சி கொல்லி மற்றும் களைகள் இன்றி காணப்படுவதுடன் தினமும் பிரஷ்ஷான காய்கறிகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும். மேலும் இந்த செங்குத்து தொழிற்நுட்பத்தில் விளையும் பயிர்களுக்கு வெளியிடங்களில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவிலிருந்து சுமார் 1 சதவிகிதம் மட்டுமே தேவவைப்படும் அதாவது 99 சதவிகித தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

இந்த செங்குத்து பண்ணைக்கான கட்டுமானத் திட்டம் எதிர்வரும் 2018 நவம்பர் மாதம் துவங்கி 1 வருட காலத்திற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது அறுவடையை எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும் என்றும் இதன் மூலம் எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திடமிருந்து உணவைப் பெறும் சுமார் 105 சர்வதேச விமான நிறுவனங்களும், 25 விமான நிலைய லவுஞ்சுகளும் பிரஷ்ஷான உணவை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
 

8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிராமம் அமீரகத்தில் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 28
8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிராமம் அமீரகத்தில் கண்டுபிடிப்பு

அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமான மரவாஹ் தீவில் (Marawah Island) சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் வீடுகளை கொண்ட பக்காவாக வடிவமைக்கப்பட்ட கிராமம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது.

கற்களை கொண்டு வீடும் அதன் கூறைகளும் கட்டப்பட்டுள்ளதுடன் பல்வேறு அறைகளுடன், தானியங்களை சேமிக்கவும், சமைக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தனித்தனி பகுதிகள் என இன்றைய நவீனகால வீடுகளின் திட்டமிடல்களை ஒத்ததாக அமைந்திருக்கின்றன 'நியோலிதிக் பிரீயட்'(Neolithic Period) எனப்படும் 'புதிய கற்காலகட்ட வீடுகள்'
(new Stone Age).

இதுவரை 10 வீடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் சிதிலமடைந்துள்ள இவை 8,000 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்தன என்ற டிஜிட்டல் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா பிராந்தியத்தில் மக்கள் நிரந்தரமாக தங்காமல் தங்களின் வேட்டையாடுதலுக்கு ஏற்றவாறு தங்களின் வளர்ப்பு கால்நடை பிராணிகளுடன் குடிபெயர்ந்து கொண்டே இருந்தனர் என்ற கோட்பாடு உடைந்துள்ளது.

இந்த நிரந்தர கல் வீடுகள் இங்கு காணப்பட்டாலும் இது விவசாய பூமியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இவர்களின் பிரதான தொழிலாக மீன் பிடித்தலும் கப்பலில் சென்று வணிகம் செய்வதுமாக இருந்திருக்கலாம் எனவும், இந்த கடல் வணிகத்தின் வழியாகவே தங்களுக்கான உணவு தானியங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கலாம் எனபதுடன் இது பண்டைய கால கடல் வணிகர்களின் பிரதான பாதையாகவும் இருந்திருக்கலாம் என்ற கருதுகோள்களும் வைக்கப்பட்டுள்ளன. Experts also believe that the ancient inhabitants of Marawah realised that the Gulf was an ancient ‘superhighway’ that connected them to their neighbours,

கடல் வணிகம் நடைபெற்றதன் சான்றாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது. இதுவரை அமீரகத்தில் அகழ்தெடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின்படி மரவாஹ் தீவின் கிராம வீடுகளே அமீரகத்தின் மிகப்பழைய வீடுகளாகும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

புதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சார்கான் பேரூர் நிர்வாக உதவி அலுவலர் சுப்பையனிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, புதுத்தெரு மிஸ்கீன் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் எஸ்.என் அகமது ஜலீல், எஸ்.எம்.ஆர் முகமது பாருக், எஸ். அப்துல் ஜப்பார், ஏ.எம் அயூப்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை இந்தியன் மளிகை கடை தொடங்கி, புதுத்தெரு மிஷ்கின் பள்ளிவாசல் வழியாக ஜாவியா சாலை வரையிலான சாலை மற்றும் புதுத்தெருவில் இருந்து கடைத்தெரு கிராணி மளிகை கடை வரை செல்லும் சாலை ஆகியவை, பல ஆண்டுகளாக சீரமைக்கமால் குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிரை பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைத்துத்தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகள் அடங்கியதாகும்.
இதில், 11-வது வார்டு புதுத்தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளை கொண்டவை. இந்த வார்டில் நானும், இரண்டு முறை எனது மனைவி பேரூராட்சி உறுப்பினர்களாக பொதுநல பணியாற்றி இருக்கிறோம்.

இந்நிலையில், இந்த வார்டில் புதுத்தெரு தென்புறம் உள்ள சாலையிலிருந்து, ஜாவியா சாலை, கிராணி மளிகை (மார்க்கெட்) சாலை வரை தார் சாலை அமைத்துத்தருவதற்கு எத்தனையோ முறை மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லை. இதைப் பற்றி நிர்வாக அதிகாரியிடமும், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களிடமும், எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கூறி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசியல் காழ்ப்புணர்வுகளால் இந்த வார்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முயற்சியுடையார், இகழ்ச்சி அடையார் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல இந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரான நான், எனது வார்டில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு இந்த வார்டில் பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்துத் தரவேண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் இன்று வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர்  பணிக்கு வராததால், பேருராட்சி நிர்வாக உதவி அலுவலர் (A.1) சுப்பையனிடம் எனது கோரிக்கை மனுவை அளித்தேன். இம்மனு மீது பேரூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 
 
 

வளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும் பஹ்ரைன்!

அதிரை நியூஸ்: ஜூன் 28
குட்டி அரபு நாடான பஹ்ரைன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்ததால் அதன் தீனார் மற்றும் பாண்டுகளின் மதிப்பு பங்குச் சந்தைகளில் சரிந்தது. இதனை தொடர்ந்து அண்டை அரபு நாடுகளான சவுதி, அமீரகம் மற்றும் குவைத் ஆகியவை ஒன்றிணைந்து பஹ்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளையும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவையும் அளிக்க முன்வந்தன. இதனால் சரிந்து கொண்டிருந்த பஹ்ரைனின் பொருளாதார மதிப்புக்கள் பங்குச் சந்தைகளில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பின.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

விபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உடைத்துக் கொண்டு தப்பிய வாலிபர் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூன் 28
அமெரிக்காவின் அர்கான்ஸஸ் சிட்டியிலிருந்து டெக்ஸாஸின் ஹவுஸ்டன் நகர் நோக்கி பறந்து கொண்டிருந்த 'செஸ்னா 210' வகை குட்டி விமானம் ஒன்று டெட்ராய்டு நகர் அருகே லேண்டிங் கியர் மற்றும் எரிபொருள் சப்ளையில் ஏற்பட்ட கோளாறுகளால் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த விமானத்தில் சிக்கியிருந்த 17 வயது இளைஞர் பெய்டன் போயஸ் (Peyton Boaz) என்ற வாலிபர் கைக்கோடாரியின் உதவியால் விமானத்தை உடைத்துக் கொண்டு அதிசயப்படும் வகையில் எரியும் தீயிலிருந்து தப்பி வந்தார் ஆனால் அவனுடைய பெற்றோர்கள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர். பெய்டன் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: Msn / Newsweek
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத காலத்திற்கு வேகம் குறைப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 28
அமீரகத்தையும் சவுதி அரேபியாவையும் இணைக்கும் சர்வதேச சாலையின் பெயர் ஷேக் கலீபா பின் ஜாயித் ஹைவே என்பதாகும், இதற்கு முன் அல் மப்ரக் - அல் குவைபத் நெடுஞ்சாலை என அழைக்கப்பட்டு வந்தது. இந்த சாலையில் மட்டும் தான் வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ எனும் அசூர வேகத்தில் செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த சர்வதேச நெடுஞ்சாலையில் புதயி மேம்பாலங்கள் கட்டுமானம், இணைப்பு சாலைகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் என பல நடைபெற்று வருவதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 6 மாத காலத்திற்கு மணிக்கு 160 கி.மீ வேகம் என்ற நிலையிலிருந்து மணிக்கு 120 கி.மீ என புதிய வேகக்கட்டுப்பாட்டை விதித்து அபுதாபி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அல் ஹமீம் மேம்பாலம் முதல் அல் தபியா மேம்பாலம் வரை இருபுறமும் புதிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு துணை சாலைகள் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இந்த நெடுஞ்சாலையில் ரேடார் கேமிராக்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 28
ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு வழங்கும் நோக்கோடு கடந்த 2018 ஜனவரி 25 ஆம் தேதி முதல் சுமார் 87 வகையான துறைகளில் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி இத்தடை நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இவ்வேலைவாய்ப்புகளின் மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 32,000 ஓமானியர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக மீடியா, ஏர்லைன்ஸ், கணக்கியல், நிர்வாக மேலாண்மை, மருத்துவத் துறை, இன்சூரன்ஸ், தகவல் தொடர்பு துறை போன்றவவைகளே தடை செய்யப்பட்ட முக்கிய துறைகளாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)

அதிரை நியூஸ்: ஜூன் 28
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி மு.அ.மு அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் யஹ்யா மரைக்காயர், மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா, முகமது புஹாரி, அபுல் ஹசன், முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரரும், அகமது ஜலாலுதீன், அகமது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், முகமது முஜம்மில், முகமது சரீப் ஆகியோரின் தகப்பனாருமாகிய சமூன் (வயது 62) அவர்கள் இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-06-2018) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, June 27, 2018

தஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப்பது குறித்து கலந்தாய்வுக்கூட்டம் (படம்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.06.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு கல்லூரி முதல்வரை தலைமையாக கொண்டு குழு அமைத்திட வேண்டும். அக்குழுவின் உறுப்பினர்களின் விவரங்கள் கைபேசி எண்கள் கல்லூரியின் வளாகத்தில் தெளிவாக ப்ளக்ஸ் போர்டு வைத்திட வேண்டும். இக்குழுவில் மாணவர் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும். கல்லூரி விடுதிக்கென்று ஒரு தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.  கல்லூரியில் முதலமாண்டு மாணவர்களுக்கென தனியாக விடுதிகள் பராமரித்திடவும், முதலமாண்டு மாணவர்களுக்கு முதலமாண்டு மாணவர்கள் என தனியே தெரியும் வகையில் தனி நிறத்தில் அடையாள அட்டை ரோப் வழங்கிட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரியில் மாணவர்கள் புகார்கள் தெரிவித்திட ஒரு புகார் பெட்டி வைத்திட வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் வாகனம் நிறுத்துமிடம், சிற்றுண்டி மையம், மைதானம் ஆகிய இடங்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலும் கண்டிப்பான முறையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவேண்டும். மேலும் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்தால் கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்கள் விடுதிகளில் வெளிப்புறங்களில் கண்டிப்பான முறையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள்  வருகைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். கேலி செய்வது தொடர்பான புகார்கள் அளிக்கும் பொழுது எந்தவித தயக்கமின்றி காவல்துறையினர்  முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாத வண்ணம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் மாணவர்களின் ஆர்வத்தினை செலுத்திடும் வண்ணம் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கல்லூரி நிர்வாக கல்லூரி வருகை புரிகின்ற புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்று நிகழ்ச்சிகளில் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு மீது உத்வேகத்தை ஏற்படுத்திட வேண்டும்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.06.2018) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டு விபத்துகளின் சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இதை குறைப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் சாலை ஓரங்களில் நிற்கும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.  தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தி தங்கள் பகுதியில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள்  கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 முதல் 10 திர்ஹம் சேவைக் கட்டணம்!

அதிரை நியூஸ்: ஜூன் 27
துபை நீங்கலாக அபுதாபி, ஷார்ஜா மற்றும் வட அமீரக பகுதிகளில் அபுதாபி எமிரேட்டுக்கு சொந்தமான அட்னாக் (Adnoc) பெட்ரோல் நிலையங்கள் இயங்குகின்றன. அபுதாபி எமிரேட்டுக்குள் இயங்கும் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் 10 திர்ஹம் சேவைக்கட்டணம் விதிக்கப்படவுள்ளது ஆனால் வட அமீரக பகுதிகளான புஜைரா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம்மல் குவைனில் சோதனை முயற்சிகள் தொடர்வதால் இங்கு பின்னொரு நாளில் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் சுயமாக அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டால் கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, அதேபோல் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளும் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தற்போது நடைமுறையிலுள்ள வழமைபோல் அட்னாக் ஊழியர்களின் உதவியுடன் பெட்ரோலை நிரப்ப விரும்பினால் (premium Services) ஒவ்வொரு சர்வீஸிற்கும் கூடுதலாக 10 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் சேவைக் கட்டணத்திற்காக தரப்படும் ரசீதை கொண்டு அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் கார் வாஷ் செய்யும் போது அல்லது அட்னாக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது குறிப்பிட்ட விகிதத் தள்ளுபடியை 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அட்னாக் நிலையங்களில் பெட்ரோல் கட்டணம் செலுத்த புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்:
வாகனங்களின் பெட்ரோல் டேங்க் அருகே 'ஸ்மார்ட் டேக்' (Smart Tag) ஒன்று பொருத்தப்படும். Radio Frequency Identification (RFID)  எனும் தொழிற்நுட்பத்தில் இயங்கும் இந்த டேக் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதற்கு ஏற்ப கட்டணத்தை உங்களுடைய பெட்ரோல் ப்ரீ பெய்டு கார்டுகள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் அட்னாக் பிளஸ் கார்டுகள் ஆகியவற்றிலிருந்து அதுவே கழித்துக் கொள்ளும். இந்த ஸ்மார்ட் டேக்குகளை பொருத்திக் கொள்ள முன்வரும் முதல் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் அதற்குப் பின் 50 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துபை மன்னர்!

அதிரை நியூஸ்: ஜூன் 27
துபையில் வாழும் ஒரு சிரியா நாட்டுக் குடும்பம் ஒன்று தங்களது கடந்த வெள்ளிக்கிழமை  பெருநாள் தினத்தன்று விடுமுறையை கொண்டாட ஒமன் நாட்டின் மஸ்கட் நோக்கி தங்களின் காரில் பயணிக்கின்றது. அமீரகத்தையும் ஓமனையும் பிரிக்கும் 'ஹத்தா' (Hatta) எல்லையருகே சென்றபோது சரியாக காலை 7 மணியளவில் சிரியா குடும்பத்தினரின் கார் பழுதடைந்து விடுகின்றது. காரில் வந்த குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த 'ஹத்தா' எல்லையில் பணியிலிருந்த இமிக்கிரேசன் துறை போலீஸான சாலிம் அல் பெத்வாவி என்பவர் உதவிக்கு வந்துள்ளார்.

பெருநாள் தினத்தின் காலை நேரம் என்பதால் எந்த மெக்கானிக்கும் பதிலளிக்கவில்லை, ரெக்கவரி வாகனமும் கிடைக்கவில்லை, டேக்ஸிக்களும் அந்த நேரத்தில் இயங்கவில்லை. போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி தன்னுடைய லேண்ட் குரூஸர் வாகனத்தை பத்தாஹ் என்கிற அந்த சிரியரிடம் தந்து அவரது பயணத்தை தொடருமாறு கூறி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மேலும் அந்த சிரியா குடும்பத்தினர் மஸ்கட்டிலிருந்து திரும்புமுன் பழுதான அவரது வாகனத்தையும் பழுதுபார்த்து வைத்திருந்துள்ளார். மேலும் மஸ்கட்டிலிருந்து திரும்பிய குடும்பத்தை தன்னுடைய லேண்ட் குரூஸரிலேயே அமரச் செய்து துபை வரை வந்து விட்டுச் சென்றுள்ளார். மெக்கானிக்கிற்கு கொடுத்த செலவுதொகைக்கு மேல் ஒரு காசைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த அரிய மனிதநேய உதவியைச் செய்த போலீஸாரைப் பற்றி துபையிலிருந்து ஒளிபரப்பாகும் 'ஸாமா துபை டிவி' எனும் தொலைக்காட்சியின் 'அல் பாத் அல் முபாஷர்' எனும் நிகழ்ச்சியில் தன்னுடைய இனிய அனுபவங்களை தெரிவித்தார் பத்தாஹ். இந்த செய்தி துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 'இது தான் இமராத்திகளின் இனிய குணம்;' என பாராட்டி பகிர்ந்துள்ளதுடன் உடனடியாக அந்த போலீஸ்காரர் சாலிம் அல் பெத்வாவி அவர்களுக்கு முதன்மை ஆபீஸர் (First Officer) என்ற பதவி உயர்வையும் வழங்கி கவுரவித்துள்ளார்.

நமது நாட்டில் அரசு சம்பளம் பெறும் போலிஸ்காரர்களில் பெரும்பாலானோர் வலம் வரும் நிலையில் சில 'போலீஸ்'காரர்கள் செய்யும் பணிக்கு அப்பாற்பட்ட மனிதநேய சேவைகள் அத்துறையினர் மீதான பொது வெறுப்பை மறந்து நேசிக்கச் செய்துவிடுகின்றதற்கும் மேலாக அமீரகத்தில் ஒரு போலீஸ்காரர் செய்த தன்னலமற்ற சேவை அந்நாட்டின் மன்னரையே நேசிக்கச் செய்ததுடன் உடனடி பதவி உயர்வையும் பெற்றுத் தந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதே.

Source: The National
தமிழில்: நம்ம ஊரான் 

தஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அனுமதி ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை, மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) 1949-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்நிறுவனத்தில் சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நோக்கம் புதிய உற்பத்தி தொடங்கவும், புதிய சேவை நிறுவனங்கள் (மருத்துவ துறை, போக்குவரத்து வாகனங்கள், உணவக விடுதிகள் போன்றவை) தொடங்குவதற்கு ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் சுமார் 122622 நிறுவனங்களுக்கு ரு.16582 கோடி அளவிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு கழகம் மூலம் ரூ.238.07 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 4208 தொழிற்சாலைகள் பயன் அடைந்துள்ளது. மருத்துவ பொருட்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், நவீன அரிசி ஆலைகள், தொழிற்கூடம் அமைத்தல் மற்றும் மருத்துவமனை, ஹோட்டல், திருமண மண்டபம் போன்றவைகள் நிறுவுவதற்கும் நிதியுதவி தொழில் முதலீட்டு கழகம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் முன்னோடி திட்டமான புதிய முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) மூலமாகவும் கடனுதவி அளிக்கப்படுகிறது. தொழில் முதலீட்டு கழகத்தின் திட்டங்கள் பொது கால கடன் திட்டம், குறு மற்றும் சிறு தொழில்களுக்கான திட்டம், இயந்திரங்கள்  மட்டும் வாங்க கடனுதவி திட்டம், My Doctor திட்டம்,  Doctor Plus திட்டம், உணவக விடுதிகள் திட்டம், வாகன கடன் திட்டம், கல்யாண மண்டபம், சமூக கூடம், மாநாட்டு கூடம், வணிக வளாக திட்டம், காற்றாலை திட்டம், மின் ஆக்கிகள் வாங்குவதற்கான திட்டம், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், நடைமுறை மூலதன காலக்கடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்கள்  (TNEB) வழங்குபவர் / ஒப்பந்தாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிறுவனத்தின்  (TWAD) ஒப்பந்தகாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம்  போன்ற பல்வேறு சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

மேலும் தஞ்சாவூரிலிருந்து விக்கிரவாண்டி வரையிலும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வரையிலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட உள்ளது. இதனால் பொருட்களை விரைவில் கொண்டு செல்லவும், பயணநேரமும் குறையும்  என்றும் தெரிவித்தார்.
       
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் வீ.ஏகாம்பரம் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கு கொண்டனர். முன்னதாக கிளை மேலாளர் கி. சத்தியநாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.