அதிரை நியூஸ்: ஜூன் 26
கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கப்பல், படகு போன்ற போக்குவரத்துக்களும். அதன் மீது அமைக்கப்படும் பாலங்களின் மீது வாகனப் போக்குவரத்துக்களும் நடைபெறுவதை பார்த்திருப்போம் ஆனால் நவீன பொறியியல் நீருக்கு மேலும், தரைக்கு மேலும் நீர்வழிப்பாதைகளை அமைத்து கப்பல் மற்றும் படகு போக்குவரத்தை சாத்தியமாக்கியுள்ளது. உலகின் அத்தகைய அற்புதமாக 10 நீர்வழிப் பாதைகளை பற்றி பார்ப்போம்.
 |
1. Aqueduct Veluwemeer, Netherlands |
1. வெலுவேமீர் நீர்வழிப்பாதை, நெதர்லாந்து
நெதர்லாந்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய செயற்கை தீவான பிளிவோலேண்ட் மாகாணத்தை நிலப்பகுதியுடன் இணைக்கும் வெலுவேமீர் ஏரியின் மத்தியில் இந்த நீர்வழிப்பாதை அமைந்துள்ளதுடன் இதன் கீழேயே 25 மீட்டர் நீளத்திற்கு சுரங்கவழிப்பாதையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் ஒருசேர நடைபெறுவது இதன் சிறப்பு. (It connects the Netherlands to Flevoland - the largest artificial island in the world)
 |
2. Pont du Sart Aqueduct, Belgium |
2. போன்ட் டு சார்ட் நீர்வழிப்பாதை, பெல்ஜியம்
சென்ட்ருக்குமகேனல் வாட்டர் சேனல் (Centrumkanaal water channel) எனப்படும் கால்வாயை இணைப்பதற்காக சுமார் 65,000 டன் எடையில் கட்டப்பட்டது இந்த நீர்வழி இணைப்புப் பாலம். இது பெல்ஜியம் நாட்டின் மேற்கே அமைந்துள்ள ஹவ்டெங்-ஜியோக்னீஸ் நகர் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
 |
3. Magdeburg Water Bridge, Germany |
3. மக்டேபர்க் நீர்ப்பாலம், ஜெர்மனி
இது எல்பி மற்றும் ஹாவெல் (it connects the Elbe and Havel channels) ஆகிய ஆற்று கால்வாய்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. நீர் போக்குவரத்திற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. உலகின் மிக நீளமான நீர்வழிப்பாலமான இதன் நீளம் 918 மீட்டராகும்.
 |
4. Pontcysyllte Aqueduct, UK |
4. பான்ட்சைஸலேட் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
1805 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்வழிப்பாதையே பிரிட்டனின் மிக நீளம் மற்றும் உயரமான நீர்வழிப் பாலமாகும். இந்த பாலத்திற்கு கீழ் பாயும் ஆற்றிற்கு மேல் சுமார் 38 மீட்டர் உயரத்திலும், 307 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (The Pontcysyllte Aqueduct also happens to be a world heritage site)
 |
5. Aqueduct Ringvaart Haarlemmermeer, Netherlands |
5. ரிங்வார்ட் ஹார்லெம்மெர்மீர் நீர்வழிப்பாலம், நெதர்லாந்து
சுற்றுவட்டச் சாலை என நம் நாட்டில் அமைக்கப்படுவது போல் இந்த நீர்வழிப்பாதை சுற்றுவட்ட வடிவில் ஏற்ற இறக்கம் மிகுந்த பள்ளத்தாக்குகளின் மீது அமைக்கப்பட்டு சுற்றியுள்ள நீர்நிலைகளின் மீது போக்குவரத்திற்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது. (The Ringvaart, is a circular canal surrounding the Haarlemmermeer polder - a low-lying tract of land enclosed by dikes). நெதர்லாந்து நாட்டின் மிகப்பழமையானதாக விளங்கும் இந்த நீர்வழிப்பாதைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்திற்கான சுரங்கவழி சாலைகள் கண்கவர் காட்சிகளாக அமைந்துள்ளன.
 |
6. Lune Aqueduct, UK |
6. லூன் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
லூன் ஆற்றின் மீது சுமார் 18 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த லன்காஸ்டர் கால்வாயை இணைக்கும் லூன் நீர்வழிப்பாதை 1797 ஆம் ஆண்டே கட்டப்பட்டுவிட்டது என்பது பேராச்சரியம். சுமார் 200 மீட்டருக்கு நீண்டுள்ள இந்த நீர்வழிப்பாலம் இங்கிலாந்தின் லங்காஷையரில் அமைந்துள்ளது. (The Lune Aqueduct carries the Lancaster Canal over 18 metres above the River Lune)
 |
7. Briare Aqueduct, France |
7. பிரியாரி நீர்வழிப்பாதை, பிரான்ஸ்
எஃகு உலோகத்தால் முழுமையாக அமைக்கப்பட்ட இந்த பிரியாரி நீர்வழிப்பாலம் ஜெர்மனியின் மக்டேபர்க் பாலம் திறக்கப்படுமுன்பாக கட்டப்பட்டதாகும். இது உருவாக்கப்பட்ட அன்றைய கால பொறியியல் திறமையை பறைசாற்றும் ஒன்றாக திகழ்கிறது.
 |
8. Naviduct Krabbersgat, Netherlands |
8. கிரப்பர்ஸ்கர்ட் நீர்வழிப்பாலம், நெதர்லாந்து
நெதர்லாந்தின் என்க்குசெயின் (Enkhuizen) நகரில் இது அமைக்கப்பட்டுள்ளதுடன் இது இருபுறமும் தண்ணீரை தேக்கி வைக்கும் தொழிற்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது (The world's first naviduct - a waterway with a lock). இது உயரத்தில் ஏற்றதாழ்வுகள் மிக்க 2 ஏரிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Connect two lakes which were on different levels).
 |
9. Edstone Aqueduct, UK |
9. எட்ஸ்டோன் நீர்வழிப்பாதை, ஐக்கிய ராஜ்ஜியம் (U.K)
இங்கிலாந்தின் மிகப்பழமையான நீர்வழிப்பாதைகளில் ஒன்றான இது ஒரு காலத்தில் அல்செஸ்டர் ரயில்வே பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிர்மிங்ஹாம் மற்றும் வார்விக்ஷையர் ரயில்வே ஆகியவற்றிற்கு இடையேயுள்ள மிகக்குறுகிய பகுதியினை இணைத்தன் மூலம் இங்கிலாந்தின் மிக நீளமான நீர்வழிப் பாலங்களில் ஒன்றாக உருமாற்றம் பெற்றுள்ளது.
 |
10. Aqueduct Langdeel, Netherlands |
10. லாங்டீல் நீர்வழிப்பாதை, நெதர்லாந்து
நெதர்லாந்தின் லியூவர்தன் (Leeuwarden) நகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். N31 மீது சுமார் 360 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு நீர்வழி போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
Source: http://www.bestwondertrip.com
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.