.

Pages

Saturday, June 16, 2018

ஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

 
அதிரை நியூஸ்: ஜூன் 31
இசுலாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஆஸ்திரேலியாவில் வாழும் அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் (SISMA அமைப்பின்) பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஆபரன் பார்க்கில் (Auburn Park) சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பரஸ்பரம் நலம் விசாரிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். அனைவருக்கும் அதிரையின் பிரசித்தம் பெற்ற 'அஞ்சு கறி' அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு 'பெருநாள் கிட்' அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் குடும்பத்துடன்  கலந்துகொண்டனர்.
 
 
  
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.