.

Pages

Wednesday, June 20, 2018

180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து தங்க கடிகாரம், நாணயங்கள் மீட்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 20
180 ஆண்டுகளுக்கு முன்பு (1838 ஆம் ஆண்டு) முழ்கிய கப்பலில் இருந்து தங்க கடிகாரம், நாணயங்கள் மீட்க்கப்பட்டது.

அமெரிக்கா, 1838 ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தின் சவண்ணாவிலிருந்து தென் கரோலினா மாகாணத்தின் சார்லஸ்டன் துறைமுகத்தை அடைந்த பின் வட கரோலினா மாகாணத்தின் பால்டிமோர் நகரை நோக்கி பயணம் செய்த போது 'புலாஸ்கி' (Pulaski) என்ற நீராவி கப்பலின் பாய்லார்கள் வெடித்து சிதறியதால் சுமார் 200 அடி ஆழத்தில் மூழ்கி ஜலசமாதியானது.

இந்த கப்பலை கடந்த 7 மாதங்களுக்கு முன் கண்டுபிடித்த குழுவினர் அதிலிருந்து பல்வேறு பொருட்களை மீட்டெடுத்து வந்தனர். இந்தக் கப்பல் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள் பயணிக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் அவர்களின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது.

1838 ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று இரவு 11 மணியளவில் வெடித்து சிதறிய இந்தக் கப்பலில் யாரோ ஓர பயணி கட்டியிருந்த தங்க கடிகாரம் இரவு சுமார் 11.05 போல் நின்று போயுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்துடன் தங்கம், வெள்ளி மற்றும் இதர உலோக நாணயங்கள் என பல்வேறு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவை பல மில்லியன் டாலர்களுக்கு விலை போகக்கூடியவை.

Source: Daily Motion
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.