.

Pages

Thursday, June 21, 2018

சவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்!

அதிரை நியூஸ்: ஜூன் 21
சவுதியிலும் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமுலுக்கு வந்தது

வளைகுடா பிராந்தியத்தில் தற்போது சூரியன் சுட்டெரிக்கும் கடும் கோடைகாலமாகும். சுமார் 50 டிகிரி செல்ஷியஸ் வரையும் அதற்கு மேலும் தகிக்கக்கூடிய சூழல் உள்ளதாலும், இந்த கடும் வெப்பத்தில் திறந்தவெளியில் பணியாற்றுவதென்பது இயலாத காரியம் என்பதாலும் உச்சிவெயில் தகிக்கும் நேரத்தில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருவதன் அடிப்படையில் சவுதியிலும் 3 மாத கட்டாய பகல்கால ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை தினமும் 3 மணிநேரம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்றாலும் வெயில் தகிக்காத சவுதி அரேபியாவின் சில பகுதிகளுக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் இதுகுறித்து தீர்க்கமான முடிவு எடுக்க சம்பந்தப்பட்ட கவர்னரேட்டுகளுடன் பேசி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய நேர கட்டாய ஓய்வு வழங்கும் உத்தரவை மீறுவோர் மீது குறைந்தது 3,000 முதல் 10,000 சவுதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தற்காலிகமாக 30 நாட்களுக்கு மூடப்படும். இத்தடை உத்தரவை மீறுபவர்களை காணும் பொதுமக்களும் இன்ன பிறரும் என்ற @MLSD_care டிவிட்டர் கணக்கில் புகார் தெரிவிக்கலாம்.

Source: Gulfinsider
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.