.

Pages

Tuesday, June 19, 2018

அதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி ~ நாளை 2 ஆட்டங்கள்!

அதிராம்பட்டினம், ஜூன் 19
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 24 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 18 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 16 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், மதுரை, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

தொடர் போட்டியின் 4-வது நாள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி காஜாமலை புட்பால் கிளப், பாண்டிச்சேரி எம்.ஜி.ஆர் செவன்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் திருச்சி அணி 2-1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியினை, அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் நீலவழகன், மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இன்றைய ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.

தொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், தொடர் போட்டியில் ஆட்ட நாயகன் தேர்வு பெரும் வீரருக்கு தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற  வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நாளை (ஜூன் 20) புதன்கிழமை ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் அதிராம்பட்டினம் WFC, பொதுக்குடி ஆகிய அணிகளும், 2-வது ஆட்டத்தில் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டங்கள் மாலை சரியாக 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.