.

Pages

Tuesday, June 19, 2018

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் முதல் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி இப்ன் அல் ஹைதம் அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.

பள்ளி அரபிக் ஆசிரியர் ஹாபிஸ் அலாவுதீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் பள்ளியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இப்ன் அல் ஹைதம் அரங்கை பள்ளி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் கலந்துகொண்டு பேசியது;
'பள்ளியில் கல்வி பயின்று பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் முன்னாள் மாணவர்கள் பள்ளி மேம்பாட்டில் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களின் ஆலோசனை, ஒத்துழைப்பு பள்ளி வளர்ச்சிக்கு உதவும். முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்களிடேயே நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட தினத்தில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும். பள்ளியில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஈடுபட வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில், பள்ளியில் கல்வி பயின்று பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்கள் சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி, அதிராம்பட்டினம் கிராத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே சாகுல் ஹமீது, சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க செயலாளர் எம்.எப் முகமது சலீம், உறவுகள் அமைப்பின் நிறுவனர் என்.காலித் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சேவைப் பணிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளி முன்னாள் மாணவர்களின் கருத்து கேட்பு நடைபெற்றது. இதில், மாணவர்கள் கலந்துகொண்டு நேரிலும், படிவத்திலும் ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26 ந் தேதி பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் பள்ளி ஆற்றிவரும் சேவைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிப்பேசினார். இதில், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பள்ளி மாணவர்களை IAS ஆக உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது, ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து  அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குவது. மத்திய, மாநில அரசுப்பணிகள், மருத்துவர்கள், தொழில் முனைவோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட பள்ளி மாணவர்களை தயார் படுத்துவது, பள்ளியில் கல்வி பயின்ற ஒவ்வொரு மாணவ மாணவிகளையும் சமூகநல சிந்தனையுடன், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக உருவாக்குவது  உள்ளிட்டவை குறித்து விளக்கியது குறிப்பிடத்தக்கது.

பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மவ்லவி முகமது இத்ரீஸ் நன்றி கூறினார். முடிவில், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம் அவர்களின் சிறப்பு துஆ (பிரார்த்தனை), பின்னர் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியுடன் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.