.

Pages

Sunday, June 17, 2018

அதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ.25 ஆயிரம் மருத்துவ நிதி உதவி!

அதிராம்பட்டினம், ஜூன் 17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 50). எலக்ட்ரிசியன். இவர், கடந்த மே 26 ந் தேதி அதிரையில் நிகழ்ந்த வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, கை, கால் செயல் இழந்து நிலையில் திருவாரூர் வி.கே ஆயுர்வேத மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க அமீரக அமைப்பின் தலைவர் எல்.எம்.ஐ அப்பாஸ், காளிதாஸை மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.25 ஆயிரம் மருத்துவ நிதி உதவியை வழங்கினார். உதவியை பெற்றுக்கொண்ட காளிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தார், முத்தம்மாள் தெரு கிராம பஞ்சயாத்தார்கள் ஆகியோர் அப்பாஸ் மற்றும் அதிராம்பட்டினம் கீழத்தெரு முகம்மதியா இஸ்லாமிய சங்க அமீரக அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, ஹாஜா முகைதீன், அதிரை பாருக், யாசர், ஜாஹிர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.