.

Pages

Sunday, June 17, 2018

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் நூருலை உடனடியாக விடுவிக்க சமூக நல அமைப்புகள் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜூன் 17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நூருல். தமிழ் தொலைகாட்சி ஒன்றில் துணை ஆசிரியராக இருந்து வருகிறார். மேலும்,  பொதுநலன் கருதி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை சமூக வலைத்தளத்தில் பதிந்து வருகிறார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பாஜக சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. “போராட்டம் நடத்தும் அனைவரையும் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என விமர்சித்து வந்த பாஜகவினரே போராட்டம் நடத்துவது பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் இந்த போராட்ட அழைப்பு கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருதுவதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் நூருலை முத்துப்பேட்டை போலீசார் விசாரணை என்ற பெயரில், அதிராம்பட்டினத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச்சென்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

சமூகத்திற்கு பாதிப்பையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தக்கூடிய எவ்வித கருத்தும் அப்பதிவில் இடம்பெறவில்லையென்றாலும், விசாரணை என்ற பெயரில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இரவு வரை அவரை காக்க வைத்து இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, பத்திரிகையாளர் நூருலை முத்துப்பேட்டை காவல்துறையினர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென, அதிராம்பட்டினம் சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.