அதிரை நியூஸ்: ஜூன் 18
கர்நாடக மாநிலம், புத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள வித்யாபுரா எனும் ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, இவரது சகோதரி பவானி (வயது 52) திருமணம் ஆகாதவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
சனிக்கிழமை மாலையாகியும் கிருஷ்ணாவின் உறவினர்களோ, அக்கம்பக்கத்தவர்களோ பவானிக்கான இறுதிச்சடங்கை செய்திட முன்வராமல் மறுத்துவிட்டனர்.
கிருஷ்ணாவின் இக்கட்டான சூழலை அறிந்த முஸ்லீம் இளைஞர்களான ஷவ்கத், ஹம்ஸா, நஸீர், ரியாஸ், பாரூக் ஆகிய 5 இளைஞர்களும் இறுதிச்சடங்கு செய்யத் தேவையான நன்கொடையை திரட்டி வழங்கியதுடன் அவர்களே பவானியின் பிரேதத்தையும் சுமந்து சென்று இறுதிக்காரியங்களை செய்தனர்.
இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதுடன் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும் இந்த மதங்கடந்த மனித நேய செயலை வெகுவாக பாராட்டியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிஸன்கள், இது தான் உண்மையான இந்திய. இந்த இந்தியாவை தங்களின் சுயலாபத்திற்காக உடைக்க முயல்கின்றனர் மதவெறி பிடித்த அரசியல்வாதிகள் என கொட்டித் தீர்த்துள்ளனர்.
இறுதிச்சடங்கை நடத்திய அந்த இஸ்லாமிய இளைஞர்கள் கூறியதாவது, இதை நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை மாறாக இறந்த எந்த மனிதருக்கும் அவரது உரிமையான இறுதிக்கடமைகள் மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவே செய்தோம் எனக்கூறினர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.