.

Pages

Tuesday, June 19, 2018

புனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்!

அதிரை நியூஸ்: ஜூன் 19
புனிதமிகு மக்காவின் ஹரம் ஷரீஃபின் மேல்மாடியிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று பிரேஞ்சு குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பங்களாதேசி ஒருவர் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் கீழே தொழுது கொண்டிருந்த ஒரு சூடானியர் ஒருவர் மேல் குதித்ததால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புனிதப்பள்ளியில் உயிரை விடுவதன் மூலம் மறுமையில் வெற்றியடையலாம் என்ற தவறான சிந்தனையினாலேயே இத்தகையோர் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் ஆனால் இஸ்லாம் தற்கொலையை மன்னிக்க முடியாத பாவம் என்றும் அது நிரந்தரமாக நரகத்திற்கு இட்டுச் செல்லும் எனவும் எச்சரிக்கின்றது. ஒரு முஸ்லீம் போர்க்களத்தில் கூட தற்கொலை செய்ய அனுமதி தராத மார்க்கம் இஸ்லாம் தான் என்பது குறிப்படத்தக்கது.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.