தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.06.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டு விபத்துகளின் சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இதை குறைப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் சாலை ஓரங்களில் நிற்கும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தி தங்கள் பகுதியில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.