.

Pages

Tuesday, June 26, 2018

தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை  உயர் அலுவலர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 05.06.2018 அன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் வருகின்ற 01.01.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி (One Time use  Plastic) மற்றும் இதர அனைத்து நெகிழிகளையும் (All Plastics) தடை செய்வதாக அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு அலுவலகங்களில் வருகின்ற 02.07.2018 முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் இதர நெகிழிகளை முற்றிலுமாக உபயோகப்படுத்தக்கூடாது என அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களும், தங்கள் அலுவலகத்தில் வருகின்ற 02.07.2018 முதல் நெகிழிகளை உபயோகப்படுத்தாமலும், அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.