பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவுபெற்று விடும் என தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து கூறினார்.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவுற்றதை அடுத்து, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன் மேற்பார்வையில், கடந்த மார்ச் 1 ந் தேதி இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டன. அதன் மற்றொரு வழித்தடமான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை முதல், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை, தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து இன்று சனிக்கிழமை காலை டிராலியில் பயணம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் வழித்தடத்தில் உள்ள பாலங்கள், தண்டவாளம் அமைப்பு, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் கூறியது; பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
ஆய்வின் போது, சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
அதிரையில் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு வரவேற்பு:
அதிராம்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு, அதிரை அனைத்து மஹல்லா (ஜமாத்) கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் வரவேற்பு அளித்தார். மேலும், இந்த வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொண்டார்.
அதிராம்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு, அதிரை அனைத்து மஹல்லா (ஜமாத்) கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் வரவேற்பு அளித்தது அனைத்து மத மக்களின் நன் மதிப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
ReplyDeleteஷிஹாபுதீன் ஹாஜியார் அவர்களுக்கு
ம்,மேற்கண்ட கலந்துரையாடலில் நல்ல பல தகவல்களை அள்ளித்தந்த ரயில்வெ அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteok
ReplyDeleteWhen come Chennai to peravurani train service
ReplyDeleteWhen will start train service between Chennai to peravurani
ReplyDelete