.

Pages

Tuesday, June 26, 2018

சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

தஞ்சாவூர் ரயிலடியில் சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு  பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  இன்று (26.06.2018) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்பேரணியானது நடத்தப்படுகிறது.  போதை பொருள் உபயோகிப்பதால் தொற்று நோய்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை ஆகிய உடற்பகுதிகளில் பாதிப்புகள், மனஅழுத்தம், மன நோய் போன்ற மன ரீதியான பாதிப்புகளும் ஏற்படும்.  போதை பொருள்களை பயிர் செய்தல், உருவாக்குதல் வைத்திருத்தல், வாங்குதல், கடத்துதல், மாநிலங்களுக்கிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற குற்றங்களுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், பெரியவர்களுடன் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று வாழ்க்கை முறையினை மாற்றி நல்;வழிப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்களை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவல் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இப்பேரணியானது தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேனிலைப்பள்ளியில் நிறைவடைந்ததது.  இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, உதவி ஆணையர் (கலால்) தனசெல்வம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டாட்சியர்கள் தங்கபிரபாகரன் (கலால்), அருணகிரி (தஞ்சாவூர்) மற்றும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.