.

Pages

Wednesday, June 20, 2018

துபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது!

அதிரை நியூஸ்: ஜூன் 20
அமீரகத்தில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்றாலும் முஸ்லீம்களுடைய ஈகை குணத்தை பயன்படுத்தி பிச்சைக்காரர்களை இறக்குமதி செய்வதை சில நிழலுலக பேர்வழிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் மிக அதிகமாக நமது இந்தியாவின் அண்டை நாடு ஒன்றிலிருந்து இந்த நிழலுலக கும்பலால் பிச்சை எடுக்க ஆட்கள் மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றனர்.

துபையின் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஆசிய நாடு ஒன்றைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை கண்ட துபை போலீஸார் அவரை கைது செய்து சோதித்தனர் அப்போது அவரிடம் 45 திர்ஹங்கள் மட்டுமே இருந்தன. சந்தேகமடைந்த போலீஸார் நன்கு சோதித்ததில் செயற்காலுக்குள் பல நாட்டு கரன்சிகளையும் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் திர்ஹங்களாகும். இந்த பிச்சைக்காரர் 1 மாதத்திற்கு முன்பு தான் விசிட் விசாவில் துபைக்கு வந்திருந்ததும் தெரியவந்தது.

கடந்த 1 மாதத்தில் மட்டும் 136 ஆண்கள், 107 பெண்கள் என 243 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக துபை போலீஸார் தெரிவித்துள்ளதுடன் இதுபோல் பிச்சைக்காரர்கள் நடமாட்டத்தை கண்டால் 901 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.