.

Pages

Monday, April 22, 2013

துபாய் தமிழர் சங்கமம் 'கவியன்பன்' கலாம் அவர்கட்குப் பாராட்டு விழா !



துபாய் தமிழர் சங்கமம் கவியன்பன் கலாம் அவர்கட்குப் பாராட்டு விழா  கடந்த [ 19.04.2013 ] வெள்ளியன்று நடைபெற்றது. வருகை தந்த அனைவரையும் திருமதி பத்மப்ரியா இராமச்சந்திரன் ( பொதுச் செயலாளரர் , துபாய் தமிழ் தளிர் ) அவர்கள் வரவேற்றனர் .நிறுவனர் திரு எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையில் . அபுதாபி யை சேர்ந்த திரு ஜலில் அகமது அவர்கள் பொதுச் செயலாளராகவும் , துபாய் யை சேர்ந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மீண்டும் அவைத் தலைவரகவும் , அஜ்மானை சேர்ந்த திரு மாரியப்பன் அவர்கள் பொருளாளராகவும் , துபாய் யை சேர்ந்த திரு செய்யது அப்துல் கறீம் அவர்கள் ஒருங்கிணைபாளராகவும் பதவியேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டனர். மாடர்ன் பாமிலி கிளினிக் உரிமையாளர் டாக்டர் விஸ்வநாதன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அவர்கள் பெற்றோர்களுக்கு அரியதொரு கருத்துரை வழங்கினார் . மரபுக் கவிஞர் 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக பாராட்டு விழா அமைத்து கௌரவப் படுத்தப்பட்டார். 

தகவல் : துபாய்த் தமிழர்ச் சங்கமம்
நன்றி : 'கவியன்பன் 'அபுல் கலாம்

8 comments:

  1. 'கவியன்பன்' அபுல் கலாம் காக்கா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனி மரபுக்கவிஞ்சர் என்ற பட்டத்துடன் வளம் வரவிருக்கும் ''அபுல் கலாம்'' அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கவிக்குறள் !

    ReplyDelete
  4. முன்னமேயே சொல்லியாகிவிட்டது அதிரையின் ஊற்று வழிந்து உலகமெங்கும் பரவட்டும் என்று

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    மச்சான் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்!

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

    உங்களின் ஊக்கமும், துஆவும் என்பால் இருக்கும் வரைக்கும் இன்ஷா அல்லாஹ் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்; நான் பிறந்த மண்ணின் பெயரை அகிலமெலாம் அறியச் செய்வேன்; எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான்களை என்றும் மறவேன். இன்ஷா அல்லாஹ் அடுத்து இலங்கை “வசந்தம்” தொலைக்காட்சிப் பேட்டி, மலேசியாவில் கவிஞர்கள் ஒன்று கூடலில் கவியரங்கம், இலண்டன் வானொலியில் பேட்டி என்று வரிசையாக அழைப்புகள் இறையருளால் வந்து கொண்டிருந்தாலும், உடல்நிலையைக் கருத்திற் கொண்டு இன்னும் ஒப்புதல் கூறாமல் இருக்கிறேன்; உங்களின் துஆவினால் இன்ஷா அல்லாஹ் என் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டால் , அதிரையின் பெயரை அனைவரும் அறியச் செய்வேன்; என் ஆசான்களின் கற்பித்தலின் அருமையை அவர்களிடம் கூ|றுவேன்.

    நெஞ்சம் நிறைவுடன் வாழ்த்துரையளித்த நேசர் ஹபீப், அதிரைக் கவிஞர் மெய்சா,விழிப்புணர்வு வித்தகர் சேக்கானா நிஜாம், தொழிலதிபர் சபீர் மற்றும் மனமுவக்கும் மச்சான் மனித உரிமைக் காவலர் ஜமால் முஹம்மத் ஆகியோர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்!

    ReplyDelete
  7. தமிழ் கூறும் நல்லுலகில்

    கவியன்பன் கலாம் அவர்களின் கவி

    நிலைத்து வாழும் ..நல்லோரே வாழ்த்தினர்

    வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  8. Your reρort features confiгmed useful to me.
    It’ѕ quite helpful anԁ you're simply clearly really experienced of this type. You possess popped our face to varying opinion of this kind of topic using intriguing and sound content.

    Feel free to visit my web page: ADIPEX
    Feel free to visit my blog : Buy ADIPEX

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.