.

Pages

Friday, May 10, 2013

அதிரையில் கந்தூரியைத் தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு ADTயின் கோரிக்கை மனு !

அஸ்ஸலாமு அலைக்கும்.

கந்தூரிக் கமிட்டியினரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு மறுதலிக்கப்படவே, மாவட்ட ஆட்சியருக்கு தாருத் தவ்ஹீத் சார்பாக கோரிக்கை மனு ஒன்று எழுதப்பட்டு, அதன் நகல்கள் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொலைநகல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்பப்பட்டன;நகரக் காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் நானும் து.தலைவர் ஜமாலுத்தீன் புகாரியும் சகோ. (சாந்தா) ஷாஹுலும் கமாலுத்தீனும் நேரில் சென்று கொடுத்தோம்.


4.5.2013
உயர்திரு K. பாஸ்கரன் IAS, அவர்கள்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தஞ்சாவூர் – 613 001
தொலைபேசி : 04362-230102 (O); 04362-230201 (R)
தொலைநகல் : 04362-230857 (O); 04362-230627 (R)
மின்னஞ்சல் :  collrtnj@nic.in

பொருள்: அதிராம்பட்டினத்தில் கந்தூரியைத் தடை செய்ய வேண்டி

ஐயா,

கடந்த பல வருடங்களாக அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள இரு தர்ஹாக்கள் சார்பாக  வழிபாடு என்ற பெயரில் அதிரை நகரத் தெருக்களில் கந்தூரிக் கமிட்டியினர் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். “கந்தூரியும் ஊர்வலமும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்திற்கு எதிரானவை” என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் எடுத்துக்கூறித் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். எங்களால் முடிந்த அளவு அவ்வப்போது அறவழியில் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் வெளியிட்டு வருகின்றோம்.

மார்க்க அறிஞர்களின் பிரச்சாரங்களாலும் விழிப்புணர்வுப் பிரசுரங்களாலும் பொதுமக்கள் ஓரளவு தெளிவடைந்து, அனாச்சாரங்களிலிருந்து விடுபட்டு வருகின்றனர். என்றாலும்  கந்தூரி ஆர்வலர்கள் பிடிவாதமாகத் தம் மௌட்டீக மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தொடர்ந்து அவற்றிலேயே மூழ்கிக் கிடப்பதோடு உயிர்ப்பலி கொடுப்பதற்கும் தயங்குவதில்லை.  கடந்த 23.12.2012இல் கந்தூரி எனும் மடமையினால் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் ஓர் உயிர் பலியானது

கந்தூரி மற்றும் ஊர்வலம் என்பன சமூக விரோதச் செயல்கள், தனிமனித விரோதம் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் நடத்துவதற்குப் பயன்படுவது வழக்கமாகத் தொடர்கிறது. கடந்த 2012 ஆண்டின் காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தின்போது நடுத்தெரு தக்வாப் பள்ளியில் மாலைத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தின்போது திட்டமிட்ட கொலை முயற்சியொன்று அதிராம்பட்டினம் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (96 & 97/2012). அதற்கு முன்னரும் கந்தூரிகளின் போது நடைபெற்ற கலவரங்கள் பல. அவற்றுள் சில கலவரங்கள் மட்டுமே அதிராம்பட்டினம் காவல்துறையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிராம்பட்டினம் பெரிய ஜும்ஆ பள்ளி அருகில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி தர்ஹாவில் எதிர்வரும் 11.5.2013இல் தொடங்கி, பத்து நாள்கள் கந்தூரி நடைபெறவுள்ளது.

கந்தூரிகளைத் தடை செய்யவேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கான காரணங்கள்:
1. இறந்துபோன மகான்களின் பெயரால் கந்தூரி விழாக் கொண்டாட்டம் என்பது நாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயத்துக்கு எதிரானது.

2. கந்தூரிகளில் நடைபெறும் பாட்டு, கூத்து, கச்சேரிகள், சூதாட்டம் ஆகியன இஸ்லாமிய சமய விழுமியங்களுக்கு எதிரானவை.

3. முறையற்ற தொடர்பு/உறவு மற்றும் கள்ளக் காதல் ஆகியன உருவாவதற்குக் கருவறையாகக் கந்தூரி விழாக்கள் பயன்படுகின்றன.

4. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கந்தூரிக் கமிட்டியினரால் வசூல் செய்யப்படும் பணம், இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதோடு இரவில் வாண வேடிக்கை எனும் பெயரால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்குத் தொல்லை தருகிறது.

5. கந்தூரி ஊர்வலத்தின்போது சமூக விரோதச் செயல்களான போதைப் பயன்பாடு, ஆபாசப் பேச்சுகள், கலவரங்கள், கல்லெறிதல், பெண்களைக் கேலி செய்தல் நடைபெறுகின்றன.

6. கந்தூரி ஊர்வலம் தொடங்கும் மாலை 4 மணி முதல் இரவு பத்து மணிவரை மின் தடையால் பொதுமக்களின் நிம்மதி கெடுகின்றது.

மேற்காணும் தொல்லைகளையும் சமூக பாதிப்புகளையும் உண்டாக்குகின்ற கந்தூரியைத் தாங்கள் தயவு கூர்ந்து தடை செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

தலைவர் : M.B. Ahmadh (signed)
செயலர் : Jameel M. Salih (signed)


நகல்கள்:
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர் Tel : 04362-277220; Fax : 04362-271553 spthnajavur@yahooo.com
நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள், அதிராம்பட்டினம்.


நேற்று (8.5.2013) மாலையில் கிராம அலுவலர் மூலமாக, ஆர்டிஓ நம்மை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகத் தொலைபேசி வழியாகச் செய்தி வந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நாள் இன்று 9.5.2013 மாலை ஐந்து மணி என மேற்காணும் எங்கள் எங்கள் நால்வரோடு சகோ. அஹ்மது ஹாஜாவையும் சேர்த்து ஐவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அமைதிப்பேச்சுவார்த்தையில் நடந்தவற்றையும் எழுதப்பட்டதையும் இன்ஷா அல்லாஹ் விபரமாக நாளைக்கான பதிவாக அனுப்பி வைப்பேன்.

ஜமீல் M. ஸாலிஹ்
[ செயலர் - ADT ]

4 comments:

  1. கலெக்டருக்கு அனுப்பிய என்னுடைய மடலில்

    அன்புக்குரிய தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு

    தஞ்சை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் உங்கள் பனிகள் பாராட்டுக்குரியவை
    உங்களுக்கு நன்றி சொல்ல நாங்கள் பெரிதும் கடமை பட்டுள்ளோம்

    நான் அதிராம்பட்டினத்தில் வாழும் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவன்
    எங்களூரில்
    இஸ்லாத்தில் இல்லாத செயலான தர்காவில் நடத்தப்படும் கந்தூரி என்ற பெயரில் சிலபேர் சொந்த வருமானத்திற்காக களியாட்டங்கள் நடத்துகின்றனர்.இஸ்லாமிய மதத்தின் பேரால் நடத்தப்படும் இந்த கந்தூரி நிகழ்சிகளுக்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது
    அது சமையத்தில் குடி, குட்டி,சூது போன்ற இஸ்லாத்தில் வண்மையாக கண்டிக்க கூடிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய பெயர்தாங்கிகள் வருடா வருடம் இஸ்லத்திற்கு களங்கம்கற்பித்துக்கொண்டுள்ளனர்.இதனால் வருடா வருடம் கலவரங்களும் நடக்கின்றன. மக்கள் மீது அன்பு கொள்ளும் தாங்கள் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த ஈனச்செயளை நடக்க விடாமல் தடுத்து நிறுத்துமாறு அதிராம்பட்டினம். இஸ்லாமியர்கள் சார்பிலும் என்னுடைய சார்பிலும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    அதிரைமன்சூர்
    ரியாத்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. நல்ல முயற்சி இந்த கந்தூரி நிச்சயம் ஒருகாலம் தடை செய்யப்படும். இன்ஷா அல்லாஹு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.