.

Pages

Monday, September 30, 2013

அபுதாபியில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக் கூட்டம் !

கடந்த 28/09/2013 மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அதிரை பைத்துல்மால் அபுதாபி கிளையின் பொருளாளர் எஸ்.முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் இல்லத்தில் இந்த அமர்வு நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் அபுதாபி கிளை நிர்வாகிகளான

எஸ். அபுல்கலாம் (தலைவர்)
என். அப்துல் மாலிக் (துணைத் தலைவர்)  
எஸ். முஹைதீன் அப்துல் காதிர் (பொருளாளர்)
ஏ.கே. ஃபைஸல் அஹ்மத் (செயலாளர்- அபுதாபி)
எம்.யூ.அப்துல் ஜலீல்( செயலாளர்- முஸஃபா) 

சகோதரர்கள் ஷுஐப் மற்றும் ஷம்ஷுல் ஹக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கிரா அத் செல்வன். முஹம்மத் இப்றாஹிம் ( எஸ். முஹைதீன் அப்துல் காதிர் அவர்களின் புதல்வர்)ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார்.

1) கூட்டு குர்பானியின் அவசியம் பற்றியும், அதற்கான தொகையை நிர்வாகிகளும் செலுத்திட வேண்டும் மற்றும் குடும்பத்தார்களிடமும் இச்செய்தியை அறிவித்து அவர்களும் உறவினர்களும் அதிரை பைத்துல் மால் அலுவலகத்திற்கு அத்தொகையை உடன் அனுப்பிடச் செய்ய வேண்டும் என்றும் சகோ. எஸ். அபுல்கலாம் அவர்கள் உரையாற்றினார்கள்.

2) அமீரகத்தில் “வட்டியில்லாக் கடன்” திட்டம் உருவாக்குதலின் அவசியம் பற்றியும்; அதன் உருவாக்கத்தில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள், செயல்முறைகள் பற்றியும் சகோ. என். அப்துல் மாலிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

1) குர்பானி பிராணிகளை அறுக்கும் கூலியும், அறுப்பதற்கான ஆட்களும் அதிரை பைத்துல்மால் தலைமையகம் ஏற்பாடுகள் செய்தல் நலம் என்று கருதப்பட்டு , இச்செய்தியைத் தலைமையகத்துக்குத் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனால் ஏற்படும் கூலி செலவுகளும் நிர்ணயிக்கப்பட்டத் தொகையுடன் சேர்க்கலாம் என்றும் கருத்துரைச் சொல்லப்பட்டது.

2) அமீரகத்தில் வட்டியில்லாக் கடன் அமல்படுத்துவதில் சிரமமின்றி விரைவாகவும் வெற்றிகரமாகவும் அமைத்திட “அதிரை அனைத்து மஹல்லாக் கூட்டமைப்பு” அமீரகக் கிளைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களைச் சந்திக்க வேண்டும். அதற்கான முன்வரைவுகள் மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டி, அமீரக அதிரை பைத்துல் மால் துபை மற்றும் அபுதாபி கிளைகளின் நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

3) அதிரையில் “இஸ்லாமிய வங்கி” ஒன்று துவங்கிட அதிரை பைத்துல் மால் தலைமையகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

4) மேற்காணும் தீர்மானங்களை அதிரை பைத்துல்மால் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களின் மேற்பார்வைக்குப் பின்னர் தான் அதிரை வலைத்தளங்களில் அவர்கள் வழியாக/ தலைமையகத்தின் கையொப்பத்துடன் வெளீயிடுதல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ், அடுத்த அமர்வு நவம்பர் இரண்டாம் வாரம் (வெள்ளிக்கிழமை) 09/11/2013 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.



தகவல் :
தலைமையகம் - அதிரை பைத்துல்மால் அதிராம்பட்டினம்.

அதிரையில் விரைவில் துவங்க உள்ள புஹாரி ஷரீஃப் [ ஜாவியா ] மஜ்லிஸ்ற்க்கான அறிவிப்பு !



அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06-10-2013 [1434-துல்கஅதா பிறை 29] ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைப்பெறும்.

ஒவ்வொரு நாளும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும். உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுப் பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் :
அதிரை புகாரி ஷரீஃப் கமிட்டி நிர்வாகிகள்

அமீரக கடற்கரைத் தெரு மஹல்லா செயற்குழு கூட்டம் தேதி அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 04 - 10 - 2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  துபையில் இயங்கிவரும் அமீரக கடற்கரைத் தெரு அமைப்பின் செயற்க் குழு கூட்டம் Hor - AL -Anz ஹபிப் பேக்கரி அருகில் உள்ள சகோதரர் பைசல்  அவர்களுடைய இல்லத்தில் நடை பெற இருக்கிறது  .

அனைத்து செயற்குழு,பொது உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


தகவல் :  அமீரக கடல் கரைத்தெரு மஹல்லா நிர்வாகிகள்

Sunday, September 29, 2013

முத்துப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ! வீடுகள் எரிந்து முற்றிலும் நாசம்.!

தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பல்: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் வீட்டை ஒட்டி மலர் என்பவரது வீடு உள்ளது.

அவர் வீட்டிலிருந்து புகைவது கண்டு அலறி அடித்து கொண்டு மும்தாஜ் ரோட்டுக்கு ஓடி வந்தார். அப்பொழுது மலர் வீட்டில் இல்லாததால் மலர் வீட்டில் பிடித்த தீ பரவி அருகே இருந்த வீடுகளில் தீ பிடித்து எரிய துவங்கியது.

இதனை கண்ட பொது மக்கள் தீயை அனைக்க போராடினர். புகை மண்டலமாக அப்பகுதி காட்சி அளித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை தீ அனைப்பு வீரர்கள் வந்து தீயை போராடி அனைத்தனர்.

மேலும் பரவாமல் இருக்க அருகே இருந்த வீடுகளில் மீதும் தண்ணீர் அடித்தனர். இதில் முகம்மது மைதீன்(59), மும்தாஜ் பேகம்(30), மலர்(35), சேக் முகைதீன்(35) ஆகியோரது நான்கு வீடுகளும் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகின. வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது.

சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி பாஸ்கரன். இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிங்கராவேல் ஆகியோர் பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டனர்

 
 
நன்றி நக்கீரன்

SDPI அதிரை நகர நிர்வாகிகளின் மனிதநேய செயல் !

சென்னை பீச் ஸ்டேசன் அருகே உள்ள உணவகத்தில் அதிரை நகர நிர்வாகிகள் உணவு பார்சல் எடுத்து வரும் போது தவறுதலாக உணவகத்தின் உரிமையாளர் ரூபாய் 500 ஐ உணவு பார்சலின் பையோடு சேர்த்து வைத்துவிட்டார்.

வீடுவந்து அவற்றை பிரித்து பார்க்கும் போது அதில் ரூபாய் 500/- இருந்ததை அறிந்து உடனே உணவகவகதிற்கு சென்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். உணவக உரிமையாளர் இவர்களின் மனித நேய செயலைக்கண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல் நன்றியையும் அன்போடு கூறியிருக்கிறார்.  

மரண அறிவிப்பு [ சென்னை தி நகர் மொய்தீன் அவர்கள் ]

சிஎம்பி லேன் கல்லுக்கொல்லை பகுதியை சேர்ந்த மர்ஹூம் நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், பைசல் அஹமது, தெளபிக் அஹமது, அப்துர் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மதுல்லா, சேக் மதினா, ஹிதயதுல்லா ஆகியோரின் மைத்துனருமாகிய அல்ஹாஜ் மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்று  [ 29-09-2013 ] காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குபின் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தகவல் : இர்பான் ( Cmp )

TMJK கட்சியினர் நடத்திய ஆர்பாட்டாத்தில் அதிரையர் பங்கேற்பு !

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழாண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் எந்த கல்வி நிலையத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சட்டப்படி 25 சதவீத இலவச இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சித் தலைவர் கே.எம். சரீப் தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அதிரை AJ. ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலர் குழ. பால்ராசு போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி பொதுச் செயலர் ஏ.வி. அப்துல் நாசர், அவைத் தலைவர் வேங்கை சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மேம்பாலம் அருகேயுள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்ட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட ஒன்றியத்தலைவர் B.பஷீர் அவர்களின் தலைமையில் 120 க்கும் மேற்பட்ட அதிரையர் கலந்துகொண்டனர்.

மரண அறிவிப்பு [ சின்ன தைக்கால் தெரு ]

சின்ன தைக்கால் தெருவை சார்ந்த மர்ஹூம் கமால் பாட்சா அவர்களின் மாமியாரும், சரபுதீன், கமருதீன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய பாத்திமா பீவி அவர்கள் இன்று  [ 29-09-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, September 28, 2013

மரண அறிவிப்பு ! [ மு.செ.மு.நெய்னா முகம்மதுவின் தாயார் ]


நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மு.செ.மு அபுல் ஹசன் ஹாஜியார் அவர்களின் மகளும்,  மர்ஹூம் மு.செ.மு பாட்சா மரைக்காயர் அவர்களின் காக்கா மகளும், மர்ஹூம் முகம்மது சேக்காதியார், முகம்மது சம்சுதீன்,முகம்மது ஹனீபா, ஹாபிஸ் முகம்மது அப்துல்லாஹ், நூருள் அமீன் இவர்களின் சகோதரியும்,மு.க.செ. முகம்மது உமர் அவர்களின் மாமியாரும்,மு.செ.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், 
நெய்னா முகம்மது அவர்களின் தாயாருமாகிய சித்தி ஸபா  அவர்கள் நேற்று [27/09/3013]இரவு 1- 30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [28/09/2013]மாலை 4.30 மணிக்கு மரைக்கா பள்ளி மைய வாடியில்    நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்வோமாக !

தகவல்: மு.செ.மு. ஜஹபர் சாதிக்

Friday, September 27, 2013

அதிரையில் தி.மு.க.நடத்திய திண்டுக்கல் ஐ.லியோனியின் மாபெரும் பட்டிமன்ற விழா.!

இன்று [27/09/2013] வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில்  பேரரிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாள் விழா பட்டிமன்ற நிகழ்ச்சி அதிரை பேரூந்து நிலைய வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம்  தலைமை தாங்கினார்.அதிரை நகர தி.மு.கழக செயலாளர் திரு இராம.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.திரு.S.S. ராஜ்குமார்  அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்ட தி.மு. கழகத் தலைவருமான திரு.S.S.பழனிமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக பட்டி மன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு  இவ்விழாவை சிறப்பிக்கும் வண்ணம்  தலைவர் கலைஞரின் புகழுக்கு காரணம் அரசியலா.?  இலக்கியமா.? என்ற  தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார்.

இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தி.மு.கழக உறுப்பினர்கள்,மற்றும் பெண்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


  










மரண அறிவிப்பு ![ கடல்கரைத் தெரு ஹபீப் முகம்மது ]



கடல்கரைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் சா.மு.கி.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஒலிசாகிப்  மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் மர்ஹூம் செ.முகம்மது இப்ராகீம்,மர்ஹூம் மா.மு.செ.அபு சாலிகு ,சேக்கா மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும் மர்ஹூம் சா.மு.கி.அப்துல் ரஹீம்,  மர்ஹூம் சா.மு.கி.அப்துல் ஜப்பார், மர்ஹூம் சா.மு.கி முகம்மது மீரா சாகிப்,மர்ஹூம் சா.மு.கி.முகம்மது அலி மரைக்காயர்  ஆகியோரின் சகோதரரும் ஹாஜி O.M. பாரூக் அவர்களின் மச்சானும் ,முகைதீன் அப்துல் காதர்  அவர்களின்  தகப்பானாரும்,A.சாகுல் ஹமீது,ஹாஜா முகைதீன்,சேக் அப்துல் காதர், சபீர் அகமது, சிராஜுதீன் ஆகியோரின்  மாமனாருமாகிய சா.மு.கி. ஹபீப் முகம்மது அவர்கள் [26/09/2013 ]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று[ 27-09-2013 ] காலை 10.00 மணியளவில் கடல்கரைத் தெருவைச்   மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, September 26, 2013

அதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம் !

இணையதள வரலாற்றில் முதன் முறையாக கண்ணி முயற்சியாக அதிரை நியூஸ் சார்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அதிரை பொதுநலன் சார்ந்த

1. நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது தொடர்பாக...

2. நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?

3. நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?

4. அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ?

ஆகிய மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு இன்று [ 26-09-2013 ] வியாழன் மாலை 4.30 மணியளவில் மாபெரும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லா  நிர்வாகிகள், அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள, பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியரோடு வார்டு கவுன்சிலர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் ஏற்படுகின்ற குறைகளையும், அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய விளக்கமளித்தார்.

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக பொதுசுகாதாரத்தை வலியுறுத்தி கோரிக்கை  மனு ஓன்று பேரூராட்சி தலைவரிடம் வழங்கப்பட்டது.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கரையூர் தெரு , கடற்கரைத் தெரு , மேலத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், கீழத்தெரு, தரகர் தெரு, முத்தம்மாள் தெரு , சேது ரோடு, பழஞ் செட்டித்தெரு, நெசவுத்தெரு, தகவா பள்ளி மீன் மார்கெட் ஆகிய பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அந்த பகுதியின் பிரதிநிதிகள் கருத்துகளை பதிந்தனர்.

நிகழ்சிகள் அனைத்தையும் அதிரை நியூஸ் முதன்மை பங்களிப்பாளர் மணிச்சுடர் சாகுல் ஹமீத் தொகுத்து வழங்கினார்.

மேலும் சூடான விவாதங்கள் குறித்து காணொளியும், கூடுதல் செய்திகளும் விரைவில் தளத்தில் பதியப்படும்.

அதிரை நியூஸ் குழு


















TNTJ அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம் அறிவிப்பு !

வழக்கம் போல் இந்தவருடமும் ஹஜ்ஜிப் பெருநாளின் கூட்டு குர்பானி திட்டம் அதிரை TNTJ கிளையின் சார்பாக துவங்கப்பட்டுள்ளது. ஆகவே நபி வழி கூட்டுக் குர்பானியில் தாங்களின் பங்கினையும் இணைத்துக் கொள்ள தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி TNTJ அதிரை கிளை நிர்வாகிகளால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.


இப்படிக்கு

TNTJ அதிரை கிளை

அதிரை பைத்துல்மாலின் கூட்டுக் குர்பானித் திட்டம் அறிவிப்பு !



அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..,

வருகின்ற தியாகத்திருநாள் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி குர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக் குர்பானி ஆடு பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,100/-

[தரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும்]

நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது.

எனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

அதிரை பைத்துல்மால் அலுவலகம் (+91) 04373 241690
ஹாஜி ஜனாப். பர்கத் [தலைவர்] 9942520199
ஹாஜி ஜனாப். அப்துல் ஹமீது [செயலாளர்] 9952120166
ஹாஜி ஜனாப். முஹம்மது முஹைதீன் 9443448115
ஹாஜி ஜனாப். அஹ்மது ஜலீல் 9942436036

சென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகம் - அதிரை பைத்துல்மால்.
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம் போன் (+91) 04373 241690
ஈமெயில் : abmchq@gmail.com
adiraibaithulmal@yahoo.com

Wednesday, September 25, 2013

மரண அறிவிப்பு ![அகமது மொய்தீன் தகப்பனார்]




புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஒ.உமர்தம்பி மரைக்காயர் மகனும், A.H. அஹமது மொய்தீன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் தகப்பானாருமாகிய O.M.அமீர்ஹம்ஜா அவர்கள் இன்று [25/09/2013 ]வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 26-09-2013 ] காலை 9.00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இந்திய இளைஞர் காங்கிரசின் துணைத்தலைவர் அதிரை மைதீன் மின்சார அலுவலருக்கு அவசரக் கடிதம் !

இந்திய இளைஞர் காங்கிரசின் துணைத்தலைவர் அதிரை மைதீன் அவர்கள் மின்சார அலுவலருக்கு அதிரை நலன் சார்ந்த கோரிக்கையை
வலியுறுத்தி அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

செம்பருத்தி




செம்பருத்திப் பூவை தெரியாதவர்கள் யாரும் உண்டா? என்றால் அதுதான் கிடையாது, எல்லோருடைய வீட்டிலும் சாதாரணமாக அழகுத் தாவரமாக வளர்க்கப்பட்டு வரும் ஒரு வகை பூச்செடியாகும்.

இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும், ஆண்மை விருத்திக்கு, குடல்புண் குணமடைய ஏற்ற மருந்து, இவற்றின் இலை, பூ, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

இந்தப் பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது, எந்த விதமான பக்க வியாதியும் வராது, இந்தப் பூவை தேனில் தொட்டோ, கற்கண்டை நுணுக்கி சேர்த்தோ சாப்பிட உடல் நலத்திற்கு ஏற்றதாகும். ஒரு தடவை சாப்பிட்டுத்தான் பாருங்களேன், அப்புறம் என்ன செம்பருத்திக்கே பற்றாக்குறை வந்துடும்.

இது சீன ரோஜா எனவும், மலேசியாவின் தேசிய மலராகவும் இருக்கின்றது.

புகைப்படங்கள் நண்பர் சேக்கனா M நிஜாம் வீட்டில் எடுத்ததாகும்.   



இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம் கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.


Tuesday, September 24, 2013

அதிரையர்கள் கொண்டாடிய சவுதி அரேபியாவின் 83வது தேசிய தினம் !

அஸ்ஸலாம் அழைக்கும் (வரஹ்)

சவுதி அரேபியாவின் 83வது தேசிய தினம் (National Day) நேற்று 23/09/13 அன்று நாடுமுழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.வீதி தோரும் மின்விழக்குகளாலும் ,கொடிகளாலும் கம்பங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

ரியாத்,ஜித்தாஹ்,தம்மாம் மற்றும் பிற நகரங்களில் மாலை நேரங்களில் வான வேடிக்கைகளுடன் அமர்கலப்பட்டன .

நமது அதிரை சகோதரர்கள் தன் தாய் திருநாட்டின் தேசிய உணர்வுகளுடன் ,தாம் பொருள் ஈட்டி வரும் சவுதி அரேபியாவில் அரபுகளை ,மண்ணின் மைந்தர்களை INDO - ARAB நேசப்படி வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.

தலைநகர் ரியாத் நகரில் உள்ள ஹாராவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னால் அய்டா தலைவர் சகோதரர்.ராபியா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களிடம் நாங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ABM ரியாத் கிளை பற்றியும், ஜித்தாவில் அய்டாவின் செயல்படுதல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது .

இன்னும் அவர்கள், தன்னுடைய பொது சேவையில் நடந்த பல நல்ல சம்பவங்களை பரிமார்க்கொண்டது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் நமதூர் நலனை முன்னுறுத்தி பல்வேறு சம்மந்தமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இஷா தொழுகையுடன் அமர்வு இனிதே நிறைவடைந்தது.








தகவல் & புகைப்படங்கள் ஹாபிள் நெய்னா முகம்மது, ரியாத்