.

Pages

Saturday, September 7, 2013

நல்லாசிரியர் விருதுபெற்ற அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியருடன் சந்திப்பு [ காணொளி ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் A.L. அஸ்ரப் அலி M.Sc., M.Phil., B.Ed அவர்கள் லயன்ஸ் சங்கம் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார்.

பெரம்பலூரில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற மாபெரும் விழாவில் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் இமயவரம்பன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் சண்முகவேல் அவர்கள் துவக்கி வைத்தார். முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. 

இதில் கல்வித்தொண்டாற்றிய சிறந்த ஆசிரியர்களுக்கு கல்விமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான ஆசிரியர்கள் விருதுகளை பெற்றுச்சென்றனர்.

கல்விப்பணியில் 2008, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் அரசு பொது தேர்வுகளில் [ +2 ] இயற்பியல் பாடத்தில் மாணவர்களை 100 % தேர்ச்சிபெற வைத்ததற்காகவும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற Mega Science Exhibition ஐ சிறப்பாக வழிநடத்தியத்தியதற்காக பாராட்டு பெற்றதற்கான தகுதியின் அடிப்படையில் அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த விருது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் A.L. அஸ்ரப்அலி M.Sc., M.Phil., B.Ed அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது, காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் மேஜர் கணபதி உள்ளிட்ட ஏனைய அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டு விருது பெற்ற ஆசிரியர் A.L. அஸ்ரப் அலி அவர்களுக்கு பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

விருது பெற்றது குறித்து ஆசிரியர் A.L. அஸ்ரப்அலி மற்றும் அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக விருதை முன்மொழிந்த நிர்வாகிகளில் ஒருவருமாகிய பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகிய இருவரிடமும் அதிரை நியூஸ் சார்பாக ஆசிரியரின் இல்லத்தில் சந்தித்து அவர்களுக்கு நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவர்களிடம் ஒரு நேர்காணலைப் பெற்றோம்.





8 comments:

  1. விருது பெற்று பெருமை சேர்த்த தந்த - வழங்கி கெளரவித்த ஆகியோருக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. விருது பெற்று பெருமை சேர்த்த தந்த - வழங்கி கெளரவித்த ஆகியோருக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்லாசிரியர் விருதுபெற்ற முதுகலை ஆசிரியர் A.L.அஸ்ரப்அலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நேற்று இந்த விழாவில் கலந்து கொள்ள முத்துப் பேட்டை அரிமா சங்கத்தின் சார்பாக எனக்கும் அழைப்பு இருந்தது. உடல் நலமில்லாததால் இந்த நல்ல காட்சியைக் காண இயலவில்லை. ஆசிரியர் அசர்ப அலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எனது முதுகலை ஆசிரியர் A.L.அஸ்ரப்அலி அவர்களுக்குநல்லாசிரியர் விருது பெற்று பெருமை சேர்த்த தந்த - வழங்கி கெளரவித்த ஆகியோருக்கு பாராட்டுகள் - வாழ்த்துக்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.