Monday, September 30, 2013
அபுதாபியில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக் கூட்டம் !
இந்நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் அபுதாபி கிளை நிர்வாகிகளான
எஸ். அபுல்கலாம் (தலைவர்)
என். அப்துல் மாலிக் (துணைத் தலைவர்)
எஸ். முஹைதீன் அப்துல் காதிர் (பொருளாளர்)
ஏ.கே. ஃபைஸல் அஹ்மத் (செயலாளர்- அபுதாபி)
எம்.யூ.அப்துல் ஜலீல்( செயலாளர்- முஸஃபா)
சகோதரர்கள் ஷுஐப் மற்றும் ஷம்ஷுல் ஹக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கிரா அத் செல்வன். முஹம்மத் இப்றாஹிம் ( எஸ். முஹைதீன் அப்துல் காதிர் அவர்களின் புதல்வர்)ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார்.
1) கூட்டு குர்பானியின் அவசியம் பற்றியும், அதற்கான தொகையை நிர்வாகிகளும் செலுத்திட வேண்டும் மற்றும் குடும்பத்தார்களிடமும் இச்செய்தியை அறிவித்து அவர்களும் உறவினர்களும் அதிரை பைத்துல் மால் அலுவலகத்திற்கு அத்தொகையை உடன் அனுப்பிடச் செய்ய வேண்டும் என்றும் சகோ. எஸ். அபுல்கலாம் அவர்கள் உரையாற்றினார்கள்.
2) அமீரகத்தில் “வட்டியில்லாக் கடன்” திட்டம் உருவாக்குதலின் அவசியம் பற்றியும்; அதன் உருவாக்கத்தில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள், செயல்முறைகள் பற்றியும் சகோ. என். அப்துல் மாலிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1) குர்பானி பிராணிகளை அறுக்கும் கூலியும், அறுப்பதற்கான ஆட்களும் அதிரை பைத்துல்மால் தலைமையகம் ஏற்பாடுகள் செய்தல் நலம் என்று கருதப்பட்டு , இச்செய்தியைத் தலைமையகத்துக்குத் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனால் ஏற்படும் கூலி செலவுகளும் நிர்ணயிக்கப்பட்டத் தொகையுடன் சேர்க்கலாம் என்றும் கருத்துரைச் சொல்லப்பட்டது.
2) அமீரகத்தில் வட்டியில்லாக் கடன் அமல்படுத்துவதில் சிரமமின்றி விரைவாகவும் வெற்றிகரமாகவும் அமைத்திட “அதிரை அனைத்து மஹல்லாக் கூட்டமைப்பு” அமீரகக் கிளைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களைச் சந்திக்க வேண்டும். அதற்கான முன்வரைவுகள் மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டி, அமீரக அதிரை பைத்துல் மால் துபை மற்றும் அபுதாபி கிளைகளின் நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
3) அதிரையில் “இஸ்லாமிய வங்கி” ஒன்று துவங்கிட அதிரை பைத்துல் மால் தலைமையகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
4) மேற்காணும் தீர்மானங்களை அதிரை பைத்துல்மால் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களின் மேற்பார்வைக்குப் பின்னர் தான் அதிரை வலைத்தளங்களில் அவர்கள் வழியாக/ தலைமையகத்தின் கையொப்பத்துடன் வெளீயிடுதல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ், அடுத்த அமர்வு நவம்பர் இரண்டாம் வாரம் (வெள்ளிக்கிழமை) 09/11/2013 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தகவல் :
தலைமையகம் - அதிரை பைத்துல்மால் அதிராம்பட்டினம்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவலுக்கு நன்றி .
ReplyDelete