.

Pages

Thursday, September 26, 2013

அதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம் !

இணையதள வரலாற்றில் முதன் முறையாக கண்ணி முயற்சியாக அதிரை நியூஸ் சார்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அதிரை பொதுநலன் சார்ந்த

1. நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது தொடர்பாக...

2. நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?

3. நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?

4. அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ?

ஆகிய மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு இன்று [ 26-09-2013 ] வியாழன் மாலை 4.30 மணியளவில் மாபெரும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லா  நிர்வாகிகள், அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள, பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியரோடு வார்டு கவுன்சிலர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் ஏற்படுகின்ற குறைகளையும், அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய விளக்கமளித்தார்.

மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக பொதுசுகாதாரத்தை வலியுறுத்தி கோரிக்கை  மனு ஓன்று பேரூராட்சி தலைவரிடம் வழங்கப்பட்டது.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கரையூர் தெரு , கடற்கரைத் தெரு , மேலத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், கீழத்தெரு, தரகர் தெரு, முத்தம்மாள் தெரு , சேது ரோடு, பழஞ் செட்டித்தெரு, நெசவுத்தெரு, தகவா பள்ளி மீன் மார்கெட் ஆகிய பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அந்த பகுதியின் பிரதிநிதிகள் கருத்துகளை பதிந்தனர்.

நிகழ்சிகள் அனைத்தையும் அதிரை நியூஸ் முதன்மை பங்களிப்பாளர் மணிச்சுடர் சாகுல் ஹமீத் தொகுத்து வழங்கினார்.

மேலும் சூடான விவாதங்கள் குறித்து காணொளியும், கூடுதல் செய்திகளும் விரைவில் தளத்தில் பதியப்படும்.

அதிரை நியூஸ் குழு


















7 comments:

  1. அருமையான நிகழ்வு
    குறைகளை போக்க இது போன்ற கலந்தாய்வு கூட்டம் அவசியம்
    ஊரின் நலன் கருதி அனைத்து முஹல்லாக்களும் அமைப்புகளும் கட்சிகளும் செயல்பட வேண்டும்.
    அதிரை நியூஸ் நிர்வாகிகள் மற்றும் சகோ சாகுல் ஹமீது ஆகியோருக்கு நன்றி

    ReplyDelete
  2. அதிரை நியூஸ் நிர்வாகிகள் மற்றும் சகோ சாகுல் ஹமீது ஆகியோருக்கு நன்றி

    ReplyDelete
  3. பள்ளிக்கூடம், பள்ளிவாசல் இந்த இரண்டு இடங்களிலும் ஒரு ஐந்து நிமிடம் வாசலில் நின்று பிள்ளைகளை அழைப்பதற்கு நிற்கவோ, நண்பர்களுடன் கதைக்கவோ முடிவதில்லை. காரணம் வாசலில் தேங்கியுள்ள குப்பைகள். சுத்தம்பற்றி போதிக்கவேண்டிய பள்ளிக்கூடம், பள்ளிவாசல்களின் வரவேற்பே இப்படி. (லாரல் பள்ளிபக்கம் போனாலும் இதே நிலைமைதான்).

    இந்த முறை பணக்காரர்களின் பள்ளியான முகைதீன் ஜும்மா பள்ளி (ஆலடித்தெரு) வாசலில் அவ்வளவு குப்பை, காலம்:பெருநாள் காலை. சரி அப்படியே நடந்து நாம தொழுகைக்கு செல்லும் சாணவயல் பக்கம் போனால், சாக்கடையை தாண்டி செல்லவேண்டியுள்ளது. நானும் பல ஆண்டுகளாக அதே சாக்கடை புதுகைலியை தூக்கிகாலைத் தூக்கி வண்டி ஓட்டி செல்லவேண்டியுள்ளது. பேரூராட்சிக்கும் அக்கரையில்லை, தொழுகை ஏற்பாட்டாளர்களுக்கும் அக்கரையில்லை. ஒருநாளைக்கு உபயோகித்தாலும் நூற்றுக்கணக்கில் வரும் இடத்தை சுத்தம் செய்யவேண்டியது அவசியம்.

    மற்றபடி அதிரைநியூஸின் முயற்சி பாராட்டுக்குரியது. கலந்துகொண்டவர்களின் கருத்துக்களையும் கேட்டு பதிந்திருக்கலாம்.

    இவ்வளவு புகைப்படம் எதற்கு, நச்சுன்னு நாலு கருத்து சொன்னவங்கள மட்டும் அவர் என்ன சொன்னாருன்னு எழுதி பதிந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. நீங்கலாச்சும் பரவாயில்லை, பின்னூட்டங்களை தந்தி மாதிரி உடனே டெலிவரி செய்றீங்க. ஆனா இந்தியா போஸ்ட்ல போட்டா மாசக்கணக்கா ஆகுது.

    ReplyDelete
  5. பயனுள்ள கூட்டம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.