.

Pages

Wednesday, September 25, 2013

செம்பருத்தி




செம்பருத்திப் பூவை தெரியாதவர்கள் யாரும் உண்டா? என்றால் அதுதான் கிடையாது, எல்லோருடைய வீட்டிலும் சாதாரணமாக அழகுத் தாவரமாக வளர்க்கப்பட்டு வரும் ஒரு வகை பூச்செடியாகும்.

இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும், ஆண்மை விருத்திக்கு, குடல்புண் குணமடைய ஏற்ற மருந்து, இவற்றின் இலை, பூ, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

இந்தப் பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது, எந்த விதமான பக்க வியாதியும் வராது, இந்தப் பூவை தேனில் தொட்டோ, கற்கண்டை நுணுக்கி சேர்த்தோ சாப்பிட உடல் நலத்திற்கு ஏற்றதாகும். ஒரு தடவை சாப்பிட்டுத்தான் பாருங்களேன், அப்புறம் என்ன செம்பருத்திக்கே பற்றாக்குறை வந்துடும்.

இது சீன ரோஜா எனவும், மலேசியாவின் தேசிய மலராகவும் இருக்கின்றது.

புகைப்படங்கள் நண்பர் சேக்கனா M நிஜாம் வீட்டில் எடுத்ததாகும்.   



இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம் கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.


3 comments:

  1. சகோ. நிஜாம் பூக்களை கொஞ்சம் விட்டும் வையுங்கள்
    வண்ணாத்திகள் தேன் குடிக்கவும்,
    கண்கள் அழகை ரசிக்கவும்.

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு செம்பருத்திப் பூவை இப்போது தான் பார்க்கிறேன். ஒரு காலத்தில் நமதூர் பெரிய ஜும்மா பள்ளியின் பழைய பள்ளி இருக்கும் போது நுழைவாயிலை அடுத்து அடர்த்தியாக அழகாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும்

    ReplyDelete
  3. " உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
    " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
    சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
    யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

    அப்புறம்
    " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
    அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
    வாங்கினேன்..

    ( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )

    சரி மேட்டர்க்கு வருவோம்...

    கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

    என்னாது நிக்கோடினா..?!!

    ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
    கூட விட மாட்டீங்களா..?!!! )

    DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
    நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
    இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

    ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

    Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

    ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

    அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

    இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

    " என்னங்க இது அநியாயமா இருக்கு..?
    நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
    தானே கேக்க வர்றீங்க..?

    ம்ம்... என்னங்க பண்றது..?

    காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

    இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.