.

Pages

Monday, September 16, 2013

கனரா வங்கிக்கு போகத் தயாராகும் சகோதர சகோதரிகளே !?

கடந்த 5 ஜூன் 2013 மற்றும் 12 ஜூன் 2013 ஆகிய தினங்களில் “அதிரையில் தாண்டவமாடும் கனரா வங்கி கனரா வங்கியின் துரித நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் பதிவுகளை இந்த தளத்தில் பதிந்து மக்களை சென்றடைய செய்தோம்.

முதல் பதிவு 5 ஜூன் 2013 அன்று பதிந்த பிறகு வங்கி நிர்வாகம் குடிதண்ணீர் வசதியை வாடிக்கையாளர்களுக்கு உடன் செய்து கொடுத்தது. மற்ற வசதிகளான, ஆண் பெண் என அடையாளம் தாங்கிய தனித்தனி இருக்கை பிரிவுகள், டோக்கன் வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு உடனடி உதவி சேவை பெஞ்ச், தங்க நகை பெட்டக வசதி போன்ற வசதிகளை இரண்டு மாத காலத்திற்குள் செய்து தருவதாக உறுதி அளித்தது.

தற்போது என்ன ஆச்சு ?
வங்கி நிர்வாகம் செக்யூரிட்டி என்று ஒரு ஆளை பணிநியமனம் செய்து அவர் இருப்பதற்கு ஒரு இடத்தையும் ஒதுக்கி விட்டது.

அந்த செக்யூரிட்டிக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது தெரியுமா?
நாம் வங்கிக்கு நுழைந்தவுடன் இடது பக்கம் மூன்று இருக்கைகள் ஒன்றாக இணைந்து இருக்கும் தெரியுமா? அந்த இருக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு அவருக்கு அந்த இடத்தை ஒதுக்கி விட்டது வங்கி நிர்வாகம்.

அப்புறப்படுத்தப்பட்ட அந்த மூன்று இருக்கைகளும் எங்கு போச்சு தெரியுமா ?
இரண்டாவது காசாளருக்கு எதிரே போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த இரண்டாவது காசாளருக்கு எதிரே மூன்று இருக்கைகள் இருக்கின்றன, மேலும் இதையும் போட்டு இருக்கின்ற நெருக்கடி போதாது என்று மேலும் கூடுதலாக அதிக நெருக்கடியை வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கொடுத்துள்ளது.

கடந்த வாரம் வங்கி கிளை மேலாளரை அவரின் அறைக்குள் சந்தித்து, பின்பு அறையிலிருந்து அவரை வாடிக்கையாளர் பகுதிக்கு அழைத்து வந்து வாடிக்கையாளர்கள் அடைகின்ற அவஸ்த்தைகளை சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த் பிரச்சனைகளை முன்னதாக வங்கி தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் ஆய்வுக்காக வங்கி உயர் அதிகாரிகள் வரப்போவதாவும், அந்த தருணம் கொண்டு மீதம் உள்ள எல்லா குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்து தரப்படும் என்று அதிரை கிளை மேலாளர் உறுதி அளித்துள்ளார்.

கனரா வங்கிக்கு போக தயாராகும் சகோதர சகோதரிகளே, கடைத்தெருவுக்கு போனால்கூட சற்று பாதுகாப்பாக போய்விட்டு வந்து விடலாம், பஸ்ஸில் பிரயாணம் செய்தால் அதிலும் பாதுகாப்பாக பிரயாணம் செய்துவிட்டு வந்து விடலாம், ஆனால் நமதூர் கனரா வங்கி இருக்கின்றதே, அவ்வளவுதான், உங்களுக்கு நிற்கக்கூட ஒரு சொட்டு இடம் கூட கிடையாது, ஆண் பெண் என்று பாராமல் அப்படி நெருக்கடியான கூட்டம் திங்கள் முதல் சனி வரை.

ஆக மொத்தத்தில் சகோதர சகோதரிகளே வங்கியினுள் கவனமாக இருக்க வேண்டியது உங்களுடைய முழு பொறுப்பு.

கனரா வங்கி தன் ஊழியர்களுக்கு மட்டும் தாராளமான இடத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை மணிக்கணக்கில் நிற்கவைத்து அவஸ்த்தைப் படவைப்பது என்ன நியாயமோ ?

அதிரை கிளை கனரா வங்கியின் கவனத்திற்கு, காலக்கிரமத்தில் வாடிக்கையாளர்களின் சிரமங்களை நீக்காவிட்டால் வாடிக்கையாளர்கள் வேறு வங்கியை நாட வேண்டி இருக்கும்.       

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், athiraiஅதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

11 comments:

  1. இந்த அவஸ்தையெல்லம் பட்டுபுட்டுதான் ஸ்டேட் பேங்கு வந்தவுடன் முதலில் கனரா வங்கியை தொலைச்சு தலை முழுகிட்டு என் கணக்கை ஸ்டேட் பேங்குக்கு மாத்திட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  2. பல வருடங்கள் ஆகிவிட்டன இந்த வங்கிக்கு நான் சென்றுவந்து...

    ஜமால் காக்காவின் ஆதங்கம் நியமானதே... சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுப்பது அவசியம் !

    ReplyDelete
  3. // கனரா வங்கி தன் ஊழியர்களுக்கு மட்டும் தாராளமான இடத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை மணிக்கணக்கில் நிற்கவைத்து அவஸ்த்தைப் படவைப்பது என்ன நியாயமோ ?//

    இது அநியாயம்

    இதுகுறித்து மண்டல அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க முயற்ச்சியுங்கள்

    ReplyDelete
  4. // ஆக மொத்தத்தில் சகோதர சகோதரிகளே வங்கியினுள் கவனமாக இருக்க வேண்டியது உங்களுடைய முழு பொறுப்பு.//

    சரியாகச்சொன்னீர்கள்

    ReplyDelete
  5. கனரா வங்கி இன்று அல்ல எப்பொழுதுமே வாடிக்கையாளரை அவதிக்கு உள்ளாக்குவதும். தரக்குறைவாய் நடத்துவதும் தொண்டு தொட்டு நடந்து வருகிறது. இதை யாரும் முறையாக கேட்பது இல்லை. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை மிகவும் அவதிக்குள்ளாக்குவதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ? நம்முடைய பணத்தை அவங்களிடம் கொடுத்துவிட்டு நாம் ஏன் இவ்வளது கஷ்டங்களை அடைய வேண்டும். ஸ்டேட் பேங்க் நல்ல சர்வீஸ் கொடுக்கிறாங்க அங்கே நாங்கள் மாற்றிவிட்டோம் நீங்களும் மாற்றி கொள்ளுங்கள்...

    ReplyDelete
  6. தம்பி ஜமால் அவர்களும் நிஜாம் அவர்களும் ஒரே நாளில் ஒரு இருநூறு பேரைத் திரட்டி கனரா வங்கியில் கணக்குகளை மூடிவிட்டு ஸ்டேட் வங்கியில் திறக்க ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் இவர்களுக்கு புத்தி வரும். முகமது யூசுப் அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.

    அதுசரி , மக்களை அவதிக்கு உள்ளாக்குவதில் யார் சிறந்தவர் என்று இந்தியன் வங்கிக்கும் கனரா வங்கிக்கும் போட்டி நடக்குதாமே உண்மையா?

    ReplyDelete
  7. தம்பி ஜமால் அவர்களும் நிஜாம் அவர்களும் ஒரே நாளில் ஒரு இருநூறு பேரைத் திரட்டி கனரா வங்கியில் கணக்குகளை மூடிவிட்டு ஸ்டேட் வங்கியில் திறக்க ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் இவர்களுக்கு புத்தி வரும். முகமது யூசுப் அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.

    அதுசரி , மக்களை அவதிக்கு உள்ளாக்குவதில் யார் சிறந்தவர் என்று இந்தியன் வங்கிக்கும் கனரா வங்கிக்கும் போட்டி நடக்குதாமே உண்மையா?

    ReplyDelete
  8. ஜமால் காக்காவின் ஆதங்கம் நியமானதே... சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுப்பது அவசியம் !


    ReplyDelete
  9. ஜமால் காக்காவின் ஆதங்கம் நியமானதே... சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுப்பது அவசியம் !


    ReplyDelete
  10. வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அவசியமில்லை போலும். ஆகவே இப்படி கவனக்குறைவாக இருக்கிறார்கள். தலைமை அலுவலகம் பெங்களூருக்கு இதுபற்றி வாடிக்கையாளர்கள் அனைவரும் புகார் எழுதி அனுப்பலாம்.

    ReplyDelete
  11. அதிரைவாசிகளே !!! நம் பணம் நம் காசு, மக்களுக்கு எந்தவிதமான செவுரியங்களும் செய்யாத வங்கியை அலட்சியப்படுத்துங்கள். வேறு வங்கியா இல்லை. மொத்தமாக இந்த வங்கியை தலை முழுகுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.