.

Pages

Thursday, September 5, 2013

அதிரைக் கடலோரப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு !

தமிழக கடலோரப்பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து இன்று பகல் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்கள் அதிரை அருகே உள்ள கடலோர கிராமமான கீழத்தோட்ட கடல் பகுதிக்கு சென்று பாதுகாப்புக் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கடற்கரை பகுதிகளிலோ, கடலிலோ அறிமுகம் இல்லாத நபர்கள், படகுகள் தென்பட்டால் உடனடியாக 1093 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ தகவல் தெரிவிக்க வேண்டும்.  படகு, கடற்கரை, மற்றும் கடலில் மர்ம பொருட்கள், படகுகள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லேமினட் செய்யப்பட்ட அறிவிப்பை மீனவர்களிடம் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தர்மராஜ் பட்டுக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் கீழத்தோட்டம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கடற்கரைப்பகுதி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் மற்றும் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தர்மராஜ் ஆகியோர் பொதுமக்களிடையே உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டதில் கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 










2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.