.

Pages

Tuesday, September 3, 2013

உயர் கல்விக்கு உதவித்தொகை ! சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் முடிவு !

உயர் கல்விக்கு உதவித்தொகை சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த சஹோதரர்கள் சஹோதரர் பஷீர் வீட்டில் சஹோதரர் மீராசாஹிப் தலைமையில் கூடி உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

அந்த கூட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வரும் கல்வியாண்டில் இருந்து வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதை எவ்வாறு, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்குவதென்ற ஆலோசனைகளை எல்லோரிடமிருந்தும் வரவேற்கிறோம். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் சமுதாய தொண்டில் உள்ளவர்களிடம் இருந்து. உங்கள் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு கீழ்கண்ட ஈமெயிலுக்கு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். நாங்கள் எடுக்கும் முடிவை ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் முன்கூட்டியே ஈமெயில் மூலமாக தெரியப் படுத்துவோம்.

எங்களின் மின்னஞ்சல் : sismaadirai@gmail.com 

இந்த விளம்பரத்தை அதிரை நியூஸில் பார்க்கும் சகோதரர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் வெளிநாட்டில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் பங்கேற்க விரும்பினால் எங்களை இமெயிலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள், 
சிட்னி, ஆஸ்திரேலியா

4 comments:

  1. உங்களின் நல்ல முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை பைத்துல்மால் சார்பாக வசதி வாய்ப்பற்றோருக்கு உயர்கல்வி திட்டத்தை கொண்டு வந்தனர். இவை முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இவை நடைமுறையில் நிர்வாகிகளால் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

    ஒருமித்த கருத்தை கொண்டுள்ள நீங்களும், அதிரை பைத்துல்மாலும இணைந்து இவற்றை முழு மூச்சுடன் செயல்பாட்டிற்கு கொண்டுவரலாமே. தகுதியுள்ளோர் பயனுற வழிவகை ஏற்படும்.

    குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பிலால் நகர் பகுதியில் வசிக்கும் ஏழை மாணவ மாணவிகளை இனங்கண்டு அவர்களுக்கு உயர்கல்வி பயில உதவுவதற்கு முயற்சியுங்கள்.

    ReplyDelete
  2. நல்லுள்ளம் படைத்த உங்களது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு மிக்க நன்றி.

    இதில் வறுமையில் இருக்கும் நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் பயன் பெறுமாறு இந்த உதவி அமையட்டும்.

    ReplyDelete
  3. உங்களின் நல்ல முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள் இதில் வறுமையில் இருக்கும் நன்கு படிக்கும் ஏழை மாணவர்கள் பயன் பெறுமாறு இந்த உதவி அமையட்டும்.

    ReplyDelete
  4. சிட்னியில் வசிக்கும் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளுக்கு எனது சலாத்தை தெரிவித்துகே கொள்கிறேன்,
    அஸ்ஸலாமு அலைக்கும்...

    நமது ஊரில் முதல் முதலில் உருவான சங்ககளில் ஒன்றுதான் ஷம்சுல் இஸ்லாம் சங்கம். அந்த சங்கம் மற்ற சங்கத்துக்கு ஒரு நல்ல எடுத்து காட்டகதான் இருக்கவேண்டும்...
    ஆனால் சங்கமோ எடுக்கும் முடிவு சரிக இல்லை...
    இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதிரையில் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் உட்பட்ட நபர்களிடம் நீங்கள் கேட்டு ஆலோசித்தால் தெரிந்துக் கொல்லாம்.

    சிட்னியில் வசிக்கும் நீங்கள் அங்கே உள்ளவர்களிடம் பணம் சேகரிக்க எந்த அளவிற்கு கஷ்ட்டப்படு படுவிர்கள் என்று உணர்ந்து, உங்களிடம் கோரிக்கையே வைக்கின்றேன்..

    நீங்கள் செய்யும் நல் காரியங்களை தனிப் பட்ட முறையில் ஒரு குழு அமைத்து அதற்குள்ள வேலைகளை தொடர்ந்தாள் நண்மையாக அமையும்...
    சம்சுல் இஸ்லாம் நிருவாகத்தில் உள்ளவர்கள், எனக்கு தெரிந்த வகையில் எல்லாவற்றிலும் பலகினவர்களாகதான் இருக்கிறார்கள்..
    ஊரில் உள்ள பிரச்சனைகளையே சரியாக நிரவேர்த்தி செய்யாமல் சோர்ந்தே நிலையில் உள்ளார்கள்..

    இவர்கள் சொல்லு ஒன்றாக இருக்கும், ஆனால் செயல் சரியாக இருக்காது.
    நண்பர்களை நீங்கள் சற்று சிந்தியுங்கள். சம்சுல் இஸ்லாம் உள்ள நிர்வாகிகளின் விட்டில் உள்ள வேலைகளையே சரிவர செய்வதில்லை, சங்கத்திலுள்ள வேலைகளை இவர்கள் பொழுது போக்ககதான் செய்து வருகிறார்கள்...

    நீங்கள் இவர்களுட்டையா பொறுப்பை ஒப்படைக்க போறிங்க.....!!!?

    என்றும் அன்புடன்...
    T. sirajudeen
    thanks:friend
    00 971 55 166 37 00

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.