.

Pages

Wednesday, September 4, 2013

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட தஞ்சை வாலிபர் !

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம், காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் குமார் (30). இவர் தஞ்சாவூர் மேம்பாலம் அருகேயுள்ள தண்டவாளத்தில், செவ்வாய்க்கிழமை மாலை பயணிகள் ரயில் வந்த போது தலையை வைத்துப் படுத்தாராம். இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததும், அதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த வழியே சென்ற அதிரையரின் கண்ணில் பட்ட இந்த கொடூரக் காட்சி நெஞ்சை பதறவைத்துள்ளது.

செய்தி : தினமணி

குறிப்பு : வாசகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் புகைப் படங்கள்  தளத்திலிருந்து நீக்கப்பட்டன.







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.