குடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளிகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றதோடு மட்டுமல்லாமல் மிகுந்த மன உளைச்சலை பெறுகின்றனர் இவர்களின் பெற்றோர்கள். மாற்று வழி நீர் ஆதாரங்களாக மக்களுக்கு பயன் தந்து வந்த குளம் குட்டைகளும் கடும் வறட்சியால் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன.
அதேபோல் இந்தப்பகுதியில் சேருகின்ற குப்பை கூளங்களையும் பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு முறையாக அள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர் இந்தப்பகுதி மக்கள். அவர்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை என்பது போல் தெருவின் முக்கிய பகுதிகளில் குப்பை கழிவுகள் ஆங்காங்கே சிதறி இருந்ததை அங்கே நாம் காணமுடிந்தது.
பொதுமக்களும், ஜமாத் நிர்வாகத்தினரும் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் முறையாக எடுத்துரைத்தும் துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
காலைப்பொழுதில் தண்ணீரை மலைபோல் நம்பியிருக்கின்ற இவர்களுக்கு மாற்று வழியாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டியது உள்ளாட்சியினரின் தலையாய கடமையாக இருக்கின்றது அல்லது குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் தடங்களை அகற்றி சீராக வழங்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றன.
மக்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம், முற்றுகை என நடுவீதிக்கு வந்து போராடும் முன்பே பேரூர் நிர்வாகம் இந்த விசயத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது.
அதிரை நியூஸ் குழு
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஆஹா, வண்ண வண்ண கலர்களில் காட்சி தரும் அருமையான குப்பை கூழங்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
Yarum yathaiyum Kandu kolvathaha illahi , oor nilamai padum pathalathil entha photovaiyum seythiyaiyum padithuvittu kakavai thavirthu oru comments ellathathu vethanaii Sinna Singapore ethuthanooooo.......
ReplyDelete