.

Pages

Tuesday, September 17, 2013

அதிரைக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகை ! கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் அதிரையில் உள்ள கடலோரக் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அதிரை நியூஸ், தினகரன், தினமலர், மாலை மலர், புதிய தலைமுறை, ராஜ் டிவி ஆகியவற்றின் நிருபர்கள் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களை சந்தித்து வருகை குறித்து கேட்டறிந்தனர்.

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடலோரப் பகுதியில் தாம் ஆய்வை மேற்கொள்ள வந்திருப்பதாகவும்,  இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழக கடற்கரை தான் மிக நீளமானது. தமிழக கடற்கரையின் நீளம் 1806 கி.மீ. இதனை பாதுகாக்க கடலோர பாதுகாப்பு குழுமம் நவீனப்படுத்தப்படும். ஏற் கனவே 12 கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையங்கள் செயல்படுகிறது.

மேலும் 30 கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். கடலோர காவல்படைக்குதண்ணீரிலும், தரையிலும் செல்லும் ஆல்ட்ரின் வாகனங்கள் வாங்கப்படும். மொத்தம் 24 வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. அதில் 2 வாக னம் அதிராம்பட்டினத் துக்கு வழங்கப்படும். காவல்துறையின் படகுகள் நிறுத்துவதற்கான இடங் கள் ( ஜெட்டி ) விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார்.





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.