.

Pages

Thursday, September 12, 2013

அதிரையில் நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு !

இன்று 12/09/2013 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் அதிரை காவல் துறையின் சார்பாக விநாயக சதூர்த்தி ஊர்வலம் நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லாஹ் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும்படி ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அசம்பாவிதம் நடக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்கும்படியும் காவல்துறையின் சார்பாக வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக் கொள்ளும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.