.

Pages

Tuesday, September 3, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஏ.யு.டி அங்கத்தினர் தர்ணா !

அதிரையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க [ AUT ] காதிர் முகைதீன் கல்லூரிக் கிளையின் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் 03.09.2013 அன்று மதியம் 12.00 அளவில் மாபெரும் தர்ணா நடத்தினார்கள்.

மத்திய அரசாங்கம் இன்று 03.09.2013 அன்று நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தினுடைய மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதால் அதை எதிர்க்கும் முகமாக இந்த தர்ணா நடத்தப்பட்டது. தர்ணாவை ஏ.யு.டியின் கிளைத் தலைவர் எம்.முகம்மது முகைதீன் அவர்கள் துவக்கி வைத்தார். பேராசிரியர்.ஜெ.சொக்கலிங்கம் ஏ.யு.டி யின் மண்டலச்செயலர் தலைமை ஏற்க பேராசிரியர்கள் அ.முகம்மது முகைதீன், என்.ஜெயவீரன், டி.லெனின் அவர்கள் முன்னிலை வகிக்க பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். கல்லூரியின் வாயில் முன்பு பெருந்திரளாக கூடியிருந்த அனைவரும் மத்திய அரசாங்கத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள். புதிய ஓய்வூதியத் திட்டமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமானது அனைத்துப் பணியாளர்களையும் பாதிப்படைய வைக்கும் ஒன்றாகும். எனவே அனைவரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள நாலாயிரம் காலிப்பணியிடஙகளை உடனடியாக நிரப்பக்கோரி முழக்கப்போராட்டம் நடை பெற்றது. 01.01.2006 முதல் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு இது வரை பணி மேம்பாடு வழங்கவில்லை. அதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைப்படி பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தக் கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது. சுயநிதி ஆசிரியர்களுடைய ஊதியத்தை  பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைப்படி குறைந்த பட்சம் 25000 ரூபாயாக கொடுத்திட வலியுறுத்தப்பட்டது. மாணவர்களுடைய கல்விக்கட்டணத்தை வரைமுறைப்படுத்திட வலிறுத்தியும் முழக்கமிடப்பட்டது.

இறுதியில் பேராசிரியர்அ.சையது அகமது கபீர் நன்றி தெரிவித்தார்.





2 comments:

  1. உங்களின் தர்ணா வெற்றியடைய வாழ்த்துக்கள் ஸார்

    ReplyDelete
  2. உங்களின் தர்ணா வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.