.

Pages

Wednesday, September 18, 2013

கண்களை தானமாக வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட அதிரை லயன்ஸ் சங்கத்தினர் !

பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் வசித்து வரும் அதிரை 2-ம் நம்பர் பள்ளிக்கூடத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அவர்களின் தாயார் மங்களாம்பாள் கடந்த [ 15-09-2013 ] அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கண்களை தானமாக கொடுக்க முன்வந்து அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகளை அனுகியதை அடுத்து அவரின் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது, முன்னாள் நிர்வாகிகள் அப்துல் ஹமீது, ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, ஆறுமுகசாமி ஆகியரோடு லியோ சங்க நிர்வாகிகள் நியாஸ் அஹமது, அதிரை மைதீன், இஸ்மாயில் ஆகியோர் கண்களை தானம் செய்த குடும்பத்தினரின் சேவையை பாராட்டி நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.