தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பாக இன்று [ 22-09-2013 ] காலை 10 மணி முதல் இரத்ததான முகாம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று வருகின்றன.
இம்முகாமில் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், அதிரை நியூஸின் முதன்மை பங்களிப்பாளர் மணிச்சுடர் சாகுல்ஹமீது, தமிழக தவ்ஹீத் ஜாமத்தின் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர்.
கிளை நிர்வாகிகள் பீர் முஹம்மது, அன்வர் அலி, மீரா, அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாதுஷா, தமீம் அன்சாரி, பக்கீர் முகம்மது, சுலைமான், ஹாஜி முஹம்மது ஆகியோர் உடனிருந்து உதவி வருகின்றனர்.
அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் இரத்ததானம் செய்கின்றார்
அதிரை நியூஸ் பங்களிப்பாளர் மணிச்சுடர் சாகுல் ஹமீது 25 வது தடவையாக இரத்ததானம் செய்த காட்சி
TNTJ இரத்தவங்கியின் பொறுப்பாளர் ஹாஜி முஹம்மது அவர்கள் முகாமை பார்வையிடும் காட்சி
தஞ்சை காளி இரத்த வங்கியின் மருத்துவர் இரத்த தானம் செய்யவந்த சகோதரர் ஒருவரை பரிசோதிக்கும் காட்சி
இரத்ததானத்தில் நம்மவர்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்பது பெருமையான விஷயம்.
ReplyDeleteசமுக சேவைக்கு நன்றி எல்லோருக்கும் இந்த இரத்ததானத்தை பற்றி விழிப்புணர்வு செய்யவும்.
ReplyDelete